எவ்வாறு தமிழ் இலக்கியங்கள் திரிக்க பட்டது. ஒரு எடுத்து காட்டு
காலைப்
காலைப்
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
இங்கே "கவரி" என்றால் "ரோமம்". "மா" என்றால் விலங்கு. "கவரி மா" என்றால் "ரோமம் உள்ள விலங்கு". திருக்குறளின் படி அந்த மயிர் நீங்கினால் அந்த விலங்கு இறந்து விடும். ஏன்? புறநானூறு பாடல் இந்த கவரி மா என்ற விலங்கு இமயத்தில் இருப்பதாக கூறுகிறது. அதாவது இமயத்தில் வாழும் எருது. அந்த குளிர் பகுதியில் அந்த ரோமம் இருக்கும் வரையில் உயிரோடு இருக்கும். ஆனால் அதன் முடி உதிர்ந்து விட்டால் குளிரில் இறந்து விடும். இதுதான் "மயிர் நீப்பின் வாழா கவரி மா". மனிதனுக்கு அந்த "கவரி மா" வின் ரோமம் போன்றது மானம் என்று சிறப்பாக பொருள் கூறுகிறார்
பரிமேலழ்கர், மணக்குடவர் எல்லோரும் ‘கவரி மா’ என்றுதான் சொல்கிறார்கள்.
ஆனால் திராவிட திரிபு வாதம் என்பது கடந்த 100 ஆண்டுகளில், "கவரி மா" வை இல்லாத ஒரு மிருகமான "கவரி மான்" என மாற்றப்பட்டு. மு.வ. , கலைஞர் என அனைவரது உரைகளிலும் இது ஏற்ற பட்டது.
காரணம் என்ன இமயத்தின் தொடர்பு தமிழனுக்கு இருக்க கூடாது என்பதாலா ?
18-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு முற்றிலும் தமிழ் இலக்கியங்கள் முற்றிலும் திரிக்க பட்டன.
இதெல்லாம் தெரியாமல் நாமும் அவைகளை உள் வாங்கி கொண்டு இருக்கிறோம்
இதே போன்று தான் வட மொழி மந்திரங்களை பற்றி திரித்து கூறுவது பழக்கம் ஆகி அது உண்மை என ஆணித்தரமாக நம்ப வைத்ததுதான் திராவிட இயங்கங்களின் வெற்றி
No comments:
Post a Comment