Tuesday, 8 June 2021

தமிழ் கடலுக்கு இந்த நீர்த்துளியின் வணக்கம்
தங்கள் பேச்சினை 25 வருடமாக கேட்டு வருகிறேன்.
தங்களின் ஆழ்ந்த  நுண் அறிவை பார்த்து வியந்து இருக்கிறேன்

நீங்கள் இங்கே பதிவிட்ட விடயங்களில் என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன்

1. நாதஸ்வரம் தமிழ் திருமணங்களில் குறைந்து வருவது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய விடயம். மேலும் கோவில்களிலும் இப்பொழுது சண்டை மேளம் முழங்க ஆரம்பித்தது விட்டது. மிகவும் வேதனைக்குரிய விஷயம். மிக  சிறந்த இசை வல்லுநர்கள் நாதஸ்வரத்தில் தான் இருந்து இருக்கிறார்கள்.  சண்டை மேளம் பற்றி ஒரு சிறிய தகவல் உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். இது சரியா , தவறா என்று தெரிய வில்லை.
திருமழிசை ஆழவாரின் "நான்முகன் திருவந்தாதி" யில் பின் வரும் பாடல் வருகிறது . இந்த பாடலில் வரும் "ஓண  விழவில் ஒலி  அதிர" என்ற வரி சண்டை மேளம் முற் காலத்தில் இருந்திருக்குமோ என்ற ஐயம் வருகிறது. தங்களின் மேலான கருத்தை அறிய விழைகிறேன்.

    காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
    ஓண விழவில் ஒலியதிர, பேணி
    வருவேங் கடவா.என் னுள்ளம் புகுந்தாய்,
    திருவேங் கடமதனைச் சென்று. 41

2. தாங்கள் இங்கே "அவாளின் வழக்கம்" என்று ப்ராஹ்மண சமூகத்தை சொல்லி இருகிறார்கள். தங்களின் தமிழுக்கு அடிமையாய்  இருக்கும் என் போன்ற அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சற்றே வலியாகவும் , ஆச்சரியமாகவும் இருக்கிறது. ப்ராஹ்மண சமூகம் அனேகமாக பார்சி இனத்தை போல் தமிழகத்தில் குறைந்து விட்டது. என்னுடைய தாயாரின் கிராம அக்ராஹாரத்தில் 400 குடும்பங்கள் இருந்தன. இன்று இரெண்டே இருந்து குடும்பங்கள் மட்டுமே இருக்கிறது. அதிகப்படியான கலப்பு மணங்கள் நடப்பதும் இந்த சமுகத்தில் தான் . அனேகமாக இன்னும் 30 ஆண்டுகளில் தமிழ் ப்ராஹ்மண சமூகம் அழிந்துவிடும் என்பதே யதார்த்த உண்மை. இந்த நிலையில் தாங்கள்  இவ்வாறு கூறி இருப்பது சற்றே வருத்தமாய் உள்ளது. தங்களை போன்ற அறிவிலும், ஆற்றலிலும் , மன  உறுதியுலும் சிறந்தவர்களால் மட்டுமே சமூகத்தில் உள்ள பிரிவுகளை ஒன்று சேர்க்க முடியும். அதனால் இவாறான கருத்துகளை தயவு கூர்ந்து தவிர்க்குமாறு தங்கள் தமிழை உருக உருக கேட்கும் அடியேனுடைய கோரிக்கை.  தவறு இருந்தால் பிழை பொறுத்து மன்னிக்கவும்.



No comments:

Post a Comment