கூவு:
இன்னிசை என் இதயத்தை தட்டியது , குயிலின் கூவல்!
மேல் மாடியின் சூடு தணிந்து இருந்தது
மெல்லிய வெளிச்சத்தை எதிர் பார்த்து என் கண்கள் விழித்தன ;இன்னும் இருள் சூழ்ந்து இருந்தது .
நொடியில் பல வருடம் பயணித்து நிகழ் காலம் வந்தேன்
உன் கூவுதலை கண்டு, கடந்துவிட்டன பல ஆண்டு
எங்கே உன் சொந்தங்கள்? எங்கே உன் நண்பர்கள் ?
விருந்துண்டு நலமாய் இருக்கிறாயா? நம் வீட்டு பருந்திடம் எவ்வாறு தப்பித்தாய்?
என் வீடு அங்கு நலம், உன் கூடு அங்கு நலமா?
மறந்து விட்டேன், அறம் தாழ்ந்து வேரறுக்க பட்டன அல்லாவா ,அந்த மரங்கள்
அதனால் தான் கூடு விட்டு கூடு பாய்ந்து இங்கு வந்தாயோ?
இலைகள் இங்கும் காணாமல் போகின்றன, வேறு இடம் பார்ப்பது நலம் .
சரி ,அது உன் கவலை .
எனக்கு இந்த தனி கூச்சல் பிடிக்கவில்லை , கூட்டு கூவல் தேவை
உன் சொந்தங்களை அழைத்தபின் சேதி சொல்,
என் படுக்கையை எடுத்து கொண்டு மாடிக்கு படுக்க வருகிறேன்
சற்று தாமதமாக கூவு, அருணனை கண்டபின்னே !

No comments:
Post a Comment