பருந்தின் கருத்து
பருந்தொன்னு பறக்குது ,
கருத்து ஒன்னு சொல்லுது
இறந்த பிணத்த தின்னும் நாங்க
இந்த பிணத்தை உண்ண வரல.
ஒட்டிப்போன கன்னத்தோட
விழுந்து கிடக்கான் நிலத்துல
நிலத்துல தான் ஈரம் இல்ல,
உங்க மனசுலமா பாரம் இல்ல ?
பாயும் நதி நீரு போச்சு,
சாயம் கலந்த நஞ்சு ஆச்சு,
மேயும் அந்த மாடு போச்சு
விவசாயம் இங்க படுத்து போச்சு
வானத்துல வந்த கங்கை
சேர்ந்தது சிவன் தலையில
தலையை சாச்சி அனுப்பி வெச்ச
இங்க கொஞ்சம் தேவல
வானம் வறண்டு போனதால
பூமி இங்க காஞ்சி போச்சு,
மேகம் பாத்து நாளும் ஆச்சு
போகுதே இவங்க மூச்சு
வெறும் சோத்துலேயும் உப்புருக்கு
வேர்வை அதிலே ஒளிஞ்சு கிடக்கு
வேர்வை வந்த தேகம் இப்போ
பூமியிலதான் விழுந்து கிடக்கு
தின்ன வந்த பருந்து நாங்க
தின்னாமல் போகிறோம்
உப்ப இட்ட தேகத்துக்கு
ரெண்டு சொட்டு நீரு விட்டு
பறந்து செல்ல பார்க்கிறோம்
பாரம் ரொம்ப ஆனதால
மனசு இன்னும் ஆறல
பறக்கவும் தான் முடியல
பருந்தொன்னு பறக்குது !
கருத்து ஒன்னு சொல்லுது !
- அரங்கராசன்
பருந்தொன்னு பறக்குது ,
கருத்து ஒன்னு சொல்லுது
இறந்த பிணத்த தின்னும் நாங்க
இந்த பிணத்தை உண்ண வரல.
ஒட்டிப்போன கன்னத்தோட
விழுந்து கிடக்கான் நிலத்துல
நிலத்துல தான் ஈரம் இல்ல,
உங்க மனசுலமா பாரம் இல்ல ?
பாயும் நதி நீரு போச்சு,
சாயம் கலந்த நஞ்சு ஆச்சு,
மேயும் அந்த மாடு போச்சு
விவசாயம் இங்க படுத்து போச்சு
வானத்துல வந்த கங்கை
சேர்ந்தது சிவன் தலையில
தலையை சாச்சி அனுப்பி வெச்ச
இங்க கொஞ்சம் தேவல
வானம் வறண்டு போனதால
பூமி இங்க காஞ்சி போச்சு,
மேகம் பாத்து நாளும் ஆச்சு
போகுதே இவங்க மூச்சு
வெறும் சோத்துலேயும் உப்புருக்கு
வேர்வை அதிலே ஒளிஞ்சு கிடக்கு
வேர்வை வந்த தேகம் இப்போ
பூமியிலதான் விழுந்து கிடக்கு
தின்ன வந்த பருந்து நாங்க
தின்னாமல் போகிறோம்
உப்ப இட்ட தேகத்துக்கு
ரெண்டு சொட்டு நீரு விட்டு
பறந்து செல்ல பார்க்கிறோம்
பாரம் ரொம்ப ஆனதால
மனசு இன்னும் ஆறல
பறக்கவும் தான் முடியல
பருந்தொன்னு பறக்குது !
கருத்து ஒன்னு சொல்லுது !
- அரங்கராசன்
No comments:
Post a Comment