Tuesday, 8 June 2021

தேசிக பிரபந்தம் அனுசந்தானம் செய்யப்படவேண்டுமா இல்லையா என்ற வாதத்திற்கு செல்ல வில்லை

தேசிகனை கல்விமான் என்று அவருடைய ப்ரபாவத்தை சுருக்கி சொல்வதற்கு எதிரான வாதங்கள்

1. தென்னாசார்ய சம்பிரதாய வித்துவான்கள் ஸ்ரீபாஷ்யம் மற்றும் கீதா பாஷாயம் காலக்ஷேபம் செயும் பக்ஷத்தில், "ஸ்ரீமன் வேங்கடந்தர்ய" தனியன் சொல்லி ஆக வேண்டும்.

2. மணவாள மாமுனிகள் அஷ்ட சிஷ்யர்களில் முக்கியம் ஆனவரான பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமிகள் தனியன் ஆரம்பமே "வேதாந்த தேசிக கடாக்ஷ" - வேதாந்த தேசிகனின் கடாக்ஷத்துக்கு பாத்திரமானவர் என்று ஆரம்பிக்கும்

3. சோளஸிம்ஹ புறம் தென்னிச்சார்யா ஸம்ப்ரதாயத்தவர்கள் "சண்டமாருதம்" என்ற புனை பெயரோடு அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தொட்டாச்சார்யா வம்சத்தவர்கள். தொட்டாச்சார்யார் வேதாந்த தேசிகனாகின் "ஷாததூஷணி " நூலுக்கு வ்யாக்யானமாக "சண்டமாருதம்" என்ற நூலை எழுதினர். அதனால் அந்த வம்சமே "சண்டமாருதம்" என்று இன்றும் அழைக்க படுகிறது

4. ஸ்ரீவைஷ்ணவ ஆலயங்களில் (தென்னாசார்ய) ஆலயங்களில் தேசிகன் சந்நிதி முக்கியமான இடங்களில் கோவிலுக்கு உள்ளே உள்ளது. இது காலம் காலமாக இருந்து வரும் சந்நிதிகள்

5. மணவாள மாமுனிகள் தேசிகனை "அபியுக்தர் அருளிச்செய்தவாரே" என்று போற்றுகிறார்.

6. தென்னாசார்ய ஸம்ப்ரத்யாதில் கீதா பாஷ்ய காலக்ஷேபம் தேசிகனின் "தாத்பர்ய சந்திரிகா" வழியாகத்தான் நடக்கும்

7. காஞ்சி ஸ்வாமிகள் வேதாந்த குரு பிரபாவம் என்ற ஒரு சிறப்பான நூலை எழுதியுள்ளார்

அதனால், தேசிகனை கல்விமான் என்று சுருக்கி அவரின் ப்ரபாவத்தை குறைத்து சொல்வது ஆச்சார்ய அபச்சாரமாகவே கருதப்படும்

கோவில்களில் உள்ள பிரச்சனைகளில் நாம் துளியும் ஆச்சார்ய அபச்சாரம் ஏற்படா வண்ணம் கவனாக இருக்க வேண்டும்.

பிள்ளை லோகாசார்யரோ , வேதாந்த தேசிகனோ அல்லது மணவாள மாமுனிகளோ வைணவம் காத்த மஹான்கள். அவர்களிடம் சிறிதும் அபச்சார படாமல் இருக்க வேண்டும். கோவில் சர்ச்சைகள்  கோவிலொடு செல்லட்டும் 

தாசன் 

No comments:

Post a Comment