Tuesday, 8 June 2021

கருமா  முகில் தரும் மாமழை
பெரும் மாநிலம் வளர் மாஉயிர்
எழும்  ஞாயிறு படர் வெண் கதிர்
அதில் ஆயிரம் தளிர் புல் தழை
பல அடர் செடி , சில நெடு மரம்
தொடும் விசும்பிடம், இருள் கவ்விடும் காடு
தரும் காய் கனி, நுனி புல் வெளி
அதை மேய்ந்திடும் மாடு
பசு காளைகள் , புலி பறவைகள்
என் நிரம்பிடும் கானம்

துள் மானினம் , அதை தான் தொட
பசிதான் புகும் வேங்கை
இதை கண்டிடும் மரம் ஏறிடும்
அதில் உச்சிடும் ஒரு குரங்கு
கீழ் தொங்கிடும் அதன் வாலிடம்
படர் கொடியினம், இடர் போக்கிடும்


கள் பருகிடும் , தனை  மறந்திடும்
மனை தவறிடும் , பண் பாடிடும் வண்டு
அதை கேட்டிடும்  தான் தோற்றிடும்
குரல் தாழிடும் குயில்கள்

ஆடை காத்திடும் ஒரு புள்ளினம்
இரை தேடிடும் வான் பறந்திடும்
அதை நோக்கிடும் ஒரு நஞ்சினம்
நகர் கூட்டிடம் , காண் குஞ்சினம்
நடுங்கிடும் அக்குஞ்சினம் அஞ்சிடும்
தாய் வர கெஞ்சிடும்  - ஓலம்
சேர் விசும்பிடம்
புள் கேட்டிடும்  அவ்விசும்பொலி
கீழ் இறங்கிடும்; தோற்றிடும் அவ்வொளி


வஞ்சம் கொண்ட ஆளினம்
தஞ்சம் என வந்தனர் - இங்கனம்
நெஞ்சில் ஈரம் இல்லா  நம்மினம்
பாதகம் பல செய்ய கானகம் சாய்த்தனர்
நாடு செழிக்க காடு அழித்தனர்
முகில் மறைந்தது, நீர் கரைந்தது
புல் மறைந்தது, புள் இறந்தது
புவி தெரிந்தது, கவி ஒழிந்தது
பசு மெலிந்து, பஞ்சம் படர்ந்தது

மாநிலம் கெடுத்த மானுடம் இல்லை
உனக்கு பாரில்  இடம்


-- ரங்கராஜன்












No comments:

Post a Comment