கடைசி ஓடை
ஓடை ஒன்றின் மீதிலே ஆமை
ஒன்று சென்றது
தன் இளமை கால நினைவு
ஒன்றை பகிர்நது கொள்ள போகுது
அந்த ஓடையில்,
குருவி ஒன்று தன் அழுக்கு போக
முழுக்கு போட வந்தது
அதனை கண்ட கெண்டை ஒன்று
மேலெழுந்து அமர்ந்தது
பாறை என்ற மேடையில்
ஆனை ஒன்று பிளிறிக்கொண்டு
அங்கே வந்து தன் தாகம் தீர்க்க
காட்டில் உள்ள விலங்கு அனைத்தும்
ஓடை நீரில் வந்து சேர
கூட்டை விட்டு வந்த குருவி
தன வீட்டை மறந்து குதூகலிக்க
நியாமான மனிதன் ஒருவன்
ஓடை கரை வந்து சேர
அவனை கண்ட அந்த குருவி
அங்கிருந்து பறந்து செல்ல
பாறை கண்ட கெண்டை மீனும்
ஓடை உள்ளே ஒளிந்து கொள்ள
தாகம் தீர்க்க வந்த கானம்
அங்கிருந்து ஓடி செல்ல
ஓடை மட்டும் சலனமின்றி
அமைதியாக சொன்ன வார்த்தை
"மாறி மாறி வரும் மனித இனம்
எந்தன் கரை வந்து செல்ல
மாறாமல் நான் மட்டும்
எப்பொழுதும் ஓடையாக"
இரண்டு மாந்தர் சம்பவத்தை
அலங்காரமாய் பாட்டமைக்க
வையம் புகழ் வார்த்தையாய்
எங்கும் பரவி போனது
ஓடை காதில் ஆமை வந்து \
மெல்ல ஒன்று சொன்னது
சொர்க் கம் சென்ற கவி
சொல்லும் வார்த்தை விழுந்தது
"அன்று ,
மனிதன் கால் ஓசை கேட்டு
விலங்கு அனைத்தும் ஓடின
ஓடாமல் இருந்த நீயோ
தவறு ஒன்று செய்து விட்டாய்
ஓடைகளின் ஆடை களைந்து
பாடை கட்டிய மனிதன் அவன்
எப்பொழுதும் ஓடும் ஓடையே
இப்பொழுதே நீயும் ஓடிவிடு
கேடு கேட்ட மனிதன் அங்கு கரையில் வந்து நிற்கிறான்
ஆமை மேலும் சொன்னது
எல்லா நீரும் தீர்ந்து போக
கடைசி ஓடை நீ எனக்கு
கடைசி விலங்கு நான் உனக்கு
ஓடி செல்வோம் , ஓடி செல்வோம்
மனிதன் நம்மை நாடும் முன்பே
No comments:
Post a Comment