உலகில் நாடுகள் வலது சாரியாக ஆகி கொண்டு இருக்கிற நேரம். ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பியன் யூனியன் என்ற நிலையில் இருந்து தம் தம் நாடுகளின் முன்னேற்றத்தை மட்டும் நோக்கி செல்லும் காலகட்டம் இது
உலகளாவிய முதலாளித்துவ, கம்ம்யூனிச, காலனிய தத்துவங்கள் ஏதும் இல்லாமல் அந்த அந்த நாடுகள் அவர் அவர்களின் வேலையை பார்க்கும் காலத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன.
உலகளாவிய முதலாளித்துவ, கம்ம்யூனிச, காலனிய தத்துவங்கள் ஏதும் இல்லாமல் அந்த அந்த நாடுகள் அவர் அவர்களின் வேலையை பார்க்கும் காலத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன.
குறிப்பாக கம்யூனிசம் பெரிய அடி வாங்கி உள்ளது. கம்யூனிசம் இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் இடைவெளி இருக்கும் பொழுது மருந்தாக வரும். கம்யூனிசத்தின் அதுதான்.
கொரோன பாதிப்புக்கு பின் பொருளாதாரத்தில் ஏற்படும் நெடு நாளைய பின்னடைவால் , ஒவ்வொரு நிலையிலும் வேலை இழப்புகள் ஏற்படும்.
அதன் விளைவால் இருப்பவருக்கும் இல்லாதவருக்கு இடையில் ஆன இடைவெளி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கம்யூனிச கொள்கைகளுக்கு உலக அளவில் புத்துயிர் பெரும். உலகம் இடது சாரி தத்துவத்தை நோக்கி நகரும்.
உலகத்தில் எப்பொழுதெல்லாம் ஒரு மிக பெரிய பிரச்சினை வந்ததோ அதன் பிறகு வரும் பிரச்னைகளுக்கு தான் மருந்து கொடுப்பதாக கம்யூனிசம் வந்து சேரும்.
மீண்டும் உலகளாவிய ஒரு தத்துவம் ஆக்கிரமிக்க வர வாய்ப்பு உள்ளது
எவ்வளவு நாட்கள் அதிகம் இந்த நிலை நீடிக்கிறதோ கம்யூனிசம் மீண்டும் உலக அளவில் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
No comments:
Post a Comment