Tuesday, 8 June 2021

மலையாள கரை ஓரம் தமிழ் பாடிய கிளி  குலசேகர ஆழ்வார் பற்றிய சில சுவாரசியமான குறிப்புகள் 
இவரை பற்றிய தனிப்பாடல் 

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியேதென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்குலசே கரனென்றே கூறு
இந்த பாடலில் கிளியை அழைத்து  , இவரின் மேன்மையை கூறு  என்பது போல் அமைந்துள்ளது 
1.இவர் சேர நாட்டை சேர்ந்த அரசன். அவதரித்த ஊர் திருவஞ்சிக்களம். இந்த  ஊர் கேரளாவில் உள்ளது. 
2.இவர் அருளிய "பெருமாள் திருமொழியில்" வரும்  பின்வரும் பாசுரம். இதில் "வாயோரீ ரைஞ்நுறு" என்ற மலையாள மொழியின் சாயல் தெரியும்.  
வாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்தவளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீவீயாத மலர்ச்சென்னி விதான மேபோல்மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக்கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்மாயோனை மணத்தூணே பற்றி நின்றென்வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே 

3. ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய்வனம்புக்க அதனுக் காற்றாதாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான்புலம்பியஅப் புலம்பல் தன்னைகூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன்குடைக்குலசே கரஞ்சொற் செய்தசீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார்தீநெறிக்கண் செல்லார் தாமேஇங்கே "கோழியார் கோன்" என்ற "கோழி நாடு" என்ற நாட்டின் அரசன் குலசேகரன் என்று கூறி இருக்கிறார். இந்த பகுதிதான் "கோழிக்கோடு" என்று வழங்க படுகிறது என்றும் நம்ப படுகிறது 
4. இவர் இராமன் மீது அளவில்லா பக்தி உடையவர். கண்ணனுக்கே தாலாட்டுகள் இருக்க, இராமனுக்கு தாலாட்டு பாட வேண்டும் என்று, 10 பாசுரம் இராமனுக்கு தாலாட்டு  பாடினார்.என்ன விடயம் என்றால், இவர் பாடின தலம் "திரு கண்ணபுரம்". இது ஒரு கண்ணன் தலம்மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனேதென்னிலங்கை கோண்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியேஎன்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ
5. குலசேகர படி : திருமலை திருவேங்கட தெய்வத்தின் மீது இவர் பாடிய 10 பாசுரங்கள் உருக்கத்தின் உச்சம்.  அதில் பின் வரும் பாசுரத்தில் இறைவனின் படியாக இருந்து அவன் பவள வாய் காண்பேன் என்று பாடி  இருப்பார்.அதனால்  இருக்கும் படி "குலசேகர படி" என்றே வழங்க படுகிறது செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே



மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே



தென்னிலங்கை கோண்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ
மற்றும் ஓர் பாசுரத்தில் 

அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன்
றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினி லேமத்தூடி
எள்கி யுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான்
குலசே கரனின் னிசையில்மேவி
சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும்
சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே


வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே

மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ 



ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய்
வனம்புக்க அதனுக் காற்றா
தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான்
புலம்பியஅப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன்
குடைக்குலசே கரஞ்சொற் செய்த
சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார்
தீநெறிக்கண் செல்லார் தாமே


அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன்
றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினி லேமத்தூடி
எள்கி யுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான்
குலசே கரனின் னிசையில்மேவி
சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும்
சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே

No comments:

Post a Comment