Tuesday, 8 June 2021

சேரன் செழிக்க செத்தானோ செழியன்?

சிலப்பதிகாரத்தில் கேட்ட கதைகளை வைத்துக்கொண்டு பார்க்கும்பொழுது அவை யாவும் பாண்டிய அரசு சேரனால் கவிழ்க்கப்பட்டதோ என்ற ஐயம் ஏற்படுகிறது

காரணம் 1:

எரிக்க பட்ட நகரம் மதுரை. அது பாண்டிய நாட்டின் தலை நகரம். ஒரு நாட்டை பிடித்துவிட்டால் எதிரி நாட்டின் தலை நகரை எரிப்பது என்பது வரலாற்றில் நடந்த விஷயங்கள். பல்லவன் வாதாபியை எரித்தது
மதுரை எரிக்கப்பட்டதற்கான காரணம் சேரன் உள் நாட்டு கலகத்தால்  இருப்பானோ?

காரணம் 2:

நெடுஞ்சிழியன் மற்றும் அவன் மனைவி இறக்கின்றனர். பாண்டிய மன்னனும் அவன் மனைவியும் இந்த கலகத்தில் கொல்லப்பட்டினரா?

காரணம் 3:

கண்ணகியின் காவியத்தை எழுதியது இளங்கோ அடிகள், இவர் சேர நாட்டு இளவரசர் . ஏன் பாண்டிய கவிகள் கண்ணகியை பாடவில்லை ?

காரணம் 3:

கண்ணகி இறுதியில் சேர நாட்டில் வாழ்ந்து மறைந்தார்.

காரணம் 4:

கண்ணகிக்கு கோவில் உள்ள இடம் இன்றைய இடுக்கி (கேரளா மாநிலத்தில் உள்ளது).  கோவில் காட்டியது சேரன் செங்குட்டுவன்

காரணம் 5:

சேர மன்னன் இளம்பொறையும் , சோழ மன்னன் கிள்ளி வளவனும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை எதிர்த்து போர் புரிந்து இருக்கிறார்கள். இளம் வயது நெடுஞ்சிழியனிடம் தோற்று போய் இருக்கார்கள்

காரணம் 6:

இன்றைக்கும் இடுக்கி மக்கள் தமிழர்களை ஏளனமாக சொல்லும் பொழுது "பாண்டி மவன்" என்றே சொல்வது உண்டு

மதுரை கலவரம் சேரனின் சூழ்ச்சி. மதுரை அழிக்க பட்டது.
பாண்டியன் அழிக்க பட்டான். கண்ணகி சேரனால் தெய்வம் ஆக்க பட்டாள்
சோழன் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை. கண்ணகி சோழ தேசத்து பெண்

ஆனால் மேலும் வலு சேர்க்கும் வலிமையான ஆதாரம் தேவை படுகிறது. அதுவரையில் கண்ணகிக்கு இழைக்கப்பட்டது அநீதி . நீதிமான் நெடுஞ்செழியன் இறந்தான்.

அ ரங்கராஜன்


No comments:

Post a Comment