Tuesday, 8 June 2021

வடகலை தென்கலை 

ராமானுஜ சித்தாந்தத்தின் இரு முக்கிய பிரிவுகள். வடகலை, தென்கலை. 
இது ஏதோ வெறும் திருமண காப்பில் உள்ள வேறுபாடு கிடையாது. இந்த பிரிவுகள் மிக நுண்ணிய தத்துவ வேறுபாடுகளின் இரு வேறு நிலைப்பாடு. ராமானுஜர் காலத்திலேயே அவர்களின் சிஷ்யர்களில் இரு வேறு வேறுபாடு இருந்ததாக கூறுவர் . பிற்காலத்தில் பிள்ளை லோகாச்சார்யார்  மற்றும் வேதாந்த தேசிகன் என்று இரு ஆச்சார்யர்கள் காலத்தில் அவை மேலும் வலுவடைந்தது. 

இந்த இரு தத்துவ நிலை படும் மிகவும் நுண்ணியமானது. இரு பிரிவுக்கும் இடையே 18 தத்துவ வேறுபாடுகள் உள்ளன 

அவற்றில் முக்கியமானதை இங்கே எனக்கு தெரிந்த அளவில் எழுதி உள்ளேன் 

1. சரணாகதி  : ராமானுஜ தத்துவத்தின் சாரமே சரணாகதி . பக்திக்கும் சில அங்கங்கள் உண்டு. ஆனால் சரணாகதி என்பது எல்லவற்றும் விடுவித்து அவனை சரண் அடைவது. பகவத் கீதை சுலோகம் "சர்வதர்மான் பரிதித்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ , அஹம் தவா சர்வ பாபேயோ மோக்ஷ்ய் யாமி மாசுச்சா:" - எல்லா தர்மகளில் இருந்தும் விடுத்தது, என்னை மட்டுமே சரண் அடைந்தால் எல்லா பாவங்களில் இருந்தும் விடுவித்து மோக்ஷத்தை அருள்வேன், கவலை படாதே". இது சரம ஸ்லோகம் என்று வைணவர்களால் பெரும் போற்ற படுகிறது. இது பகவத் கீதையின் சாரமாக போற்ற படுகிறது. 
இங்கே சொல்லப்படும் சரணாகதியை ராமானுஜரின் சித்தாந்தம் ஆணி வேர் ஆகும் 

1. இறைவன் யார்?
2. நாம் யார்?
3. இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு என்னை ?
4. இறைவனை நாம் அடையும் வழி என்ன?>
5. இறைவனை நாம் அடைய தடைகளை உள்ளவை என்ன?

இவர் "அர்த்த பஞ்சகம்" என்று போறும். இந்த அர்த்த பஞ்சகம் மேல் உள்ள கீதை ஸ்லோகத்தின் மூலமாக விடை கிடைக்கும் 

1. இறைவன் யார்? மோக்ஷத்தை அளிப்பவன், சரண் அடையக்கூடிய ஒரே பரம் பொருள் . பரம கருணை உள்ளவன். 

2. நாம் யார்?  சரண் அடைய வேண்டியவர்கள். கர்மத்தால் கட்டுண்டவர்கள் 

3.  இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம் -  அவன் பரம் பொருள், நான் ஜீவன்.  அவன் கர்மா வய படாதவன் . நாம் கர்மா வய பட்டுள்ளோம். அவன் நம் கர்மத்தை போக்க வல்லவன். அவன் நமக்காக இறங்கி வந்து நாம் அவனை அடையவும் , அவனுக்கும் நமக்கும் உள்ள இணை பிரியா சம்பந்தத்தை தெளிவு படுத்தினான் 

4. இறைவனை அடைய வழிகள்? சரணாகதி 

5.இறைவனை நாம் அடைய தடைகள்? நம்முடைய கர்மங்கள்,  நாம் அவனை பற்றாதது 


சரணாகதி என்பது பிரபத்தி என்றும் வழங்க புடும். வைணவத்தில் இறைவன் பரம காருணிகனாக, நாம் எல்லோரும் தன்னை  அடைய வேண்டும் என்ற பரிபூர்ண எண்ணம் உடையவனாக, தயையின் முழு உருவமாக இருக்கிறான்.

இப்பொழுது இரு பிரிவுகளின் வேறுபாடுகளுக்கு வருவோம்.

வடகலை: இறைவன் திருவடி அடைய சரணாகதி என்பது முக்கியம். நாம் நம்முடைய எல்லா கர்மங்களும், அதன் பலனையும் விடுத்தது (Resignation from all ) அவனை சரண் அடைவோம்.  ஆனால், அந்த பற்றுதலேய ஒரு காரணமாக கொண்டு இறைவன் நம்மக்கு மோக்ஷம் அளிப்பான். அதாவது, நம்முடைய சரணாகதி என்ற செய்கையின் பிரசாதமாக இறைவன் மோக்ஷத்தை அளிப்பான். மோக்ஷதை அதைவதற்கு இந்த சரணாகதி காரணம் ஆகிறது. "சஹீதுக கிருபா". சரணத்தை காரணமாக வைத்து இறைவனின் மோக்ஷம் அருளுதல். 

தென்கலை: நம்முடைய சரணாகதி (Resignation from all ) மோக்ஷத்தை ஒரு அங்கமே தவிர்த்து, அதுவே மோட்சத்தை அருளாது . நாம் சரணாகதி மட்டுமே செய்ய கடமை பட்டுள்ளோம். இறுதியில் இறைவனின் அருளே இதில் முடிவானது. எந்தவித வேண்டுதலும் இல்லமால் அவனை சரண் அடைய வேண்டும். இறைவனே மோக்ஷம் அளிப்பதற்கான காரணம், நாம் செயும் சரணாகதி அல்ல. சரணாகதி ஆத்மாவின் இயல்பானது. மோக்ஷம் இறைவனின் முடிவு. அவனை சரணாகதி கட்டுப்படுத்தாது. நாம் செயும் சரணாகதி "ஏரி " வெட்டுவது போல். "ஏரி " வெட்டுவது மழை பெய கரணம் ஆகாது". நாம் செயும் சரணாகதி என்பது "ஏரி" வெட்டுவது போல். "மழை" எனப்து இறைவனின் கருணை. மோக்ஷம் என்பது "சஹீதுக க்ருபா" அல்ல, இறைவனின் "நிர்ஹேதுக க்ருபா" (எந்த வித காரணமும் இல்லாமல் இருக்க கூடிய கருணை). சரணாகதி ஒரு காரணம் அல்ல. இறைவனே இறுதி முடிவு செய்யபவன் 

.....தொடரும் 









No comments:

Post a Comment