வேதத்தின் மற்றும் ஆகமத்தின் அடிபடையில் அமைந்ததே ஹிந்து தர்ம மதங்கள். சைவ சித்தாந்தம் ஆகமத்தை ஒட்டிய மதம் , அதே போல் வைகானச வீர வைணவமும் ஆகமம் சார்ந்த மதம். வைகானச மதம் நான் அறிந்த வரையில் வைணவத்தின் பழமையான வடிவம். ஆனால் ஆகமங்கள் ஏதோ வேதங்களுக்கு எதிரானவையாக சித்தரிக்க பட்டு வருகிறது.
சைவ சித்தாந்தத்தின் ஆணி வேறாக இருக்கும் தேவார பாடல்களில் வேதம் போற்ற படுகிறது. "வேதம் யாவினும் மெய் பொருள் ஆவது நாதம் நாமம் நமசிவாயமே " என்று வேதத்தின் உட்பொருக்களாக சிவ பெருமானையே போற்றுகின்றன. அது மட்டும் அல்லாமல் "சொற்றுணை வேதியன்" என்ற பதிகத்தில் சிவ பெருமான் "வேதியன்" என்று போற்ற படுகின்றார்.
மேலும் திருஞானசம்பந்தர் இலங்கையில் உள்ள திருக்கோணேஸ்வரம் பற்றிய பதிகத்தை இராமேஸ்வரத்தில் இருந்தே பாடினார். அதற்க்கு காரணம் அவர் வேதியர் குலத்தை சார்ந்தவர். ஹிந்து தர்மப்படி வேதியர் குலத்தை சார்ந்தவர்கள் கடல் தாண்டி செல்ல கூடாது. அந்த தர்மத்தை ஒட்டியே சம்பந்தர் பெருமான் கடல் தாண்டாமல் இங்கிருந்தே அந்த பதிகத்தை பாடினார். இவை எல்லாம் எதை உணர்த்துகின்றன? சைவ சித்தாந்தமும் வேத ஹிந்து தர்மத்தை கட்டி காத்துள்ளன
இப்பொழுது வைணவத்துக்கு வருவோம். வைகானச வீர வைணவர்களும் வேத ஹிந்து தர்மத்தின் பால் நடப்பவர்கள். வைணவ ஆச்சார்யர்களும் வேத தர்மத்தை ஒட்டியே வாழ்ந்து இருக்கின்றனர். குறிப்பாக யாக யஞன்களில் கொடுக்கடும் ஹவுசுகள் மற்றய தேவதைகளுக்கு கொடுக்க படுகின்றன. ஏக தெய்வ ஆராதனையை ஏற்றி நடக்கும் வைணவ ப்ராஹ்மணர்கள் எவ்வாறு செய்யலாம் என்ற கேள்வி வந்த பொழுது, மகரிஷிகளும் , நாதமுனிகள் முதலிய ஆச்சார்யர்களும் செய்த வழியே பின்பற்ற வேண்டும். மற்றய தேவதையின் உச்சதராணத்தை மாற்றாமல், தர்மம் சாஸ்திரத்தில் சொன்ன படியே நடக்க வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்க பட்டுள்ளது. அதாவது. பர தேவதையாக நாராயணனும், தத்துவமாக விசிஷ்டாத்வைதமும் மற்றும் வாழ்வியல் நடைமுறையாக வைதீக கர்மாக்களை இருக்கின்றன. வைதீக கர்மாக்கள் எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு சிறு எடுத்து காட்டின் மூலமாக அறியலாம். ஒரு அசுப நிகழ்வு நடந்தால் ஆகம கர்மவானா திருவாராதனம் என்ற இறை பூஜை நின்று விடும். மற்றய அனைத்து கர்மாக்களை நின்று விடும். ஆனால் நித்ய கர்மாவின் முக்கிய அங்கமான சந்த்யா வந்தனம் செய்து ஆக வேண்டும். அந்த அளவுக்கு வைதீகம் முந்துகிறது. வைணவம் என்பது ஓன்றும் வைத்தீக்க மதத்தில் இருந்து வேறு பட்டது இல்லை. வைணவம் என்பது வைதீக மதத்திற்கு உட்பட்டது.
No comments:
Post a Comment