Tuesday, 8 June 2021

சான்றோர்

ஒரு பெரிய மனிதர் என்னிடம் "உங்க சொந்த ஊரு எது?" என்று கேட்டார் . நான் "காஞ்சிபுரம்" பக்கம் என்று சொன்னேன். அதற்கு அவர் "தொண்டை நாடு சான்றோர் உடைத்து, அப்படி என்றால் நீங்கள் ஒரு gentleman என்றார்".

இரு விஷயம் தெரிந்து கொண்டேன்
1. ஒரு மனிதரை பார்த்தவுடன் அவர் சார்ந்த நல்ல விஷயம் சொல்லும் பொழுது , ஒரு நல்ல நேர்முக எண்ணம் ஏற்படும்
2.  சான்றோர் என்றால் "நன்றாக கல்வி பயின்றவர்" என்று நினைத்து இருந்தேன். ஆனால், "Gentleman" என்று தெரிந்து கொண்டேன்

இப்பொழுது விஷயத்துக்கு வருவோம். அறிவுடையவர்கள், சான்றோர்கள், கற்றவர்கள் , அன்பானவர்கள், கருணையானவர்கள்., இவை எல்லாம் ஒன்றா, இல்லை வேற. சற்றே அலசுவோம்

"தன்மகனை சான்றோன் என கேட்ட தாய்" - ஒரு தாய் எப்பொழுது பெருமை அடைவாள் என்றால் , தன்னுடைய மகனை சான்றோன் கேட்கும்பொழுது.

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்க்கு தக" - படி, குற்றத்தை நீக்கி படி. பின்பு குற்றம் பின் நட

கல்வி இல்லாத அறிவு  இருந்தால் அவர்களின் Knowledgeஇல் ஒரு குறைவு இருக்கும் . அதனால் அவர்களின் வீச்சு குறைவுதான்

அறிவு இல்லாத கல்வி வெறும் எட்டு சுரைக்கையாக இருக்கும்

அறிவும் , கல்வியும் இருந்தும் ஒழுக்கம் இல்லமால் போனால் அது மிகவும் அபாயகரமானது

அறிவும், கல்வியும், ஒழுக்கமும் இருந்து சமூக அக்கறையும், மற்றவர்கள் மீது அன்பும் இல்லமால் இருந்தால் , அது சுய முன்னேற்றத்துக்கு மட்டுமே பயன் பெரும். மற்றவர்களுக்கோ , சமுதாயத்துக்கோ இல்லை.

இவை எல்லாம் இருந்து அவன் "இறைவன் திருவடியை" அடையாமல் இருப்பானேயானால் அதனால் பயன் இல்லை. இதை தான் வள்ளுவர் "வாலறிவன் நற்றாள் தொழார் எனில்" என்று கூறி இருக்கிறார். இது கடவுள் வாழ்த்தில் வரும் குறள். வெறும் அறிவு சார் மக்களை "தாள்" வணங்கு என்று சொல்ல வில்லை. அதாவது நாம் அறிவு, கல்வி, ஒழுக்கம், நற்பண்பு எல்லாம் இறைவன் திருவடியை சென்றடைய வேண்டும்.


இவ்வாறு அறிவு, கல்வி, ஒழுக்கம், அன்பு, சமூக அக்கறை  மற்றும் இறைவன் திருவடியை வணங்குபவன்  ஆகிய அனைத்து பண்புகளும் நிறைந்தவர்கள் தான் "சான்றோர்" என அழைக்கு படுவாராகள். இதை தான் ஒரு தாய் விரும்புவாள் என்று சொல்கிறார் வள்ளுவர்.


இப்பொழுது "இறைவன்" என்றால் என்ன? இறைவன் என்பவன் இவை எல்லாவற்றுக்கும் மேம்பட்ட ஒரு பொருள்.  எல்லாவற்றிற்கும் ஆதியான பொருள். இதை முதல் குறளிலேயே சொல்கிறார். "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதேற்றே உலகு"
"எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது"

அதனால் திருவள்ளுவர் இறைவனை பற்றிய சொல்லும் விஷயங்களை இறைவனாகவே பார்க்கவேண்டும். அதை தவிர்த்து சான்றோர்கள் , அறிவு உடையவர்கள் என்று சொல்வது திருவள்ளுவர் என்ற "ஞானி" சொல்ல வந்ததை மாறாக சொல்லும் விஷயம் 


வள்ளுவத்திடம் இருந்து வருவது:

சான்றோர்  = அறிவு + கல்வி + ஒழுக்கம் + அன்பு  + சமூக அக்கறை + இறைவன் திருவடி தொழல் .

இறைவன் = எல்லா உலகத்துக்கும் ஆதாரமானவன் 







No comments:

Post a Comment