சில சந்தேகங்கள்
1. தொல்காப்பியர் இயற்சொல், திரிசொல் , திசை சொல், வட சொல் என்று பிரிக்கிறார். இயற்சொல் பேசப்பட்ட பகுதி செந்தமிழ் நாடு என்று சொல்ல படுகிறது. அப்படியானால், வட சொல் இல்லமால் இயற் சொல்லாடல் மட்டும் பேச கூடிய செந்தமிழ் நாடு இருந்து இருக்கிறது என்ற பொருள் வருமா?
2. செந்தமிழ் நாடே பற்றிய குறிப்பை சொல்லி அது காவிரி டெல்டா பகுதி என்று கூறி இருக்கிறார். ஆனால் தமிழ் பொதிகை மலை பகுதியில் தோன்றியது என்ற கூற்றின் நிலை என்ன? பாரதியும் "செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடலில் "காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி " என்று கூறுகிறார். இங்கே வைகையை தமிழ் தோன்றிய ஆறு என்று கூறுகிறார். செந்தமிழ் நாடு என்பது வைகை நதியா இல்லை காவிரி டெல்டா பகுதியா ?

3. தொல்காப்பியர் தமிழ் மற்றும் வட சொல் பற்றி மட்டுமமே சொல்கிறார் . அப்படியானால் மற்ற மொழிகள் (கன்னடம், தெலுங்கு,மலையாளம்) இல்லவே இல்லை என்ற முடிவுக்கு வர முடியுமா?
4. திராவிட என்ற சொல்லாடல் வைணவ இலக்கியங்களில் இருக்கிறது. திருவாய்மொழி "திராவிட உபநிஷத்" என்று வட ,மொழியில் உரை உள்ளது. நம்மாழவாவரை "திராவிட வேத சாகரம்" என்று போற்ற படுகிறார். அதனால் ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திராவிடம் என்ற வழங்க பட்டு இருக்கிறது. இங்கும் சற்று விளக்கம் தேவை
No comments:
Post a Comment