Tuesday, 8 June 2021

கச்சி அருளாளனும் அருளிச்செயலும்

தேசிக பிரபந்தம் ஏன் அருளாளன் சந்நிதியில் அருள்செய படவேண்டும்?

கச்சி பேரருளாளன் பற்றிய முழு பதிகம் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இல்லை. "அத்தியூரான்" என்ற ஒற்றை வரி கச்சி பேரருளாளனை திவ்ய தேசத்தில் சேர்த்தது. ஆழவார்கள் அனைவரும் அவன் திருமுக மண்டலத்தில் ஆழ்ந்ததினால் வாய் மொழியாக பதிகங்கள் அருளியது இல்லை. அழகின் அவ்வளவும் ஆன திருமுக மண்டலம் அருளாளனுக்கு

அருளாளனின் அருளை, கூரத்தாழவன் , தேசிகன் மற்றும் மணவாள மாமுனிகள் தங்களின் வட மொழி பாடல்களால் துதித்து இருக்கின்றனர். ஆனால் பெருமாளுக்கு பதிகமாய் இருப்பது தேசிகனின் ஆறு அருளிச்செயல்களே. உயும் ஆறு அருளியவனுக்கு ஆரண தேசிகன் ஆறு திருப்பதிகங்கள் அருளி செய்து இருக்கிறார். அதனால்,  அருளாளன் பற்றிய பதிகங்கள் தேசிகனால் அருள செய்யப்பட்ட இவை மட்டுமே. அவனை பற்றி பாடிய பதிகங்களை அவன் முன் அனுசந்தானம் செய்வது மிகவும் பொருத்தமானது. அவனை பற்றிய பதிகங்கள் அவன் முன் அனுசந்தானம் செய்யாமல் இருப்பது பொருந்துமா?

எனவே, அவனை பற்றி இருக்கும் தமிழ் பதிகங்கள் தேசிகனால் அருள பட்டவை மட்டுமே. அவைகள் அவனை குளிர்விக்கும். அவனை பற்றி பாடிய பாடல்கள் அவன் முன்  பாட பட வேண்டும்

இதில் உரிமை, ஆச்சாரியார் என்ற வித்யாசம் பார்க்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, அவன் மனம் குளிர அவனை பற்றிய பாடல்களை ஓத ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்

பெருந்தேவி தாயார்  பேரருளான் திருவடிகளே சரணம்

-- ரங்கராஜன்



No comments:

Post a Comment