Tuesday, 8 June 2021

காஞ்சி மகாஸ்வாமிகள் ஸ்ரீமத் அழகியசிங்கருக்கு பூர்வஸ்ரமத்தில் சொன்ன விஷயம் "கஷ்டபடேன்".

சமீபத்தில் முக்கூர் லக்ஷ்மினரசிம்ஹசாரியார் சுவாமிகளின் பகவத் கீதை  உபன்யாசம் கேட்டு  கொண்டு இருந்தேன்!! அதில் அவர் சொன்ன ஒரு விஷயம் "பகவத் கீதை  முழுவதும் ஒரு ஸ்லோகத்தில் சொல்ல வேண்டுமானால் சரவ தர்மன் பர்திதிய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ! அஹம் த்வா சரவ பாபேப்யோ மோக்ஷையிஅமி மாசுச்ச . எல்லா தரம்ன்களும் விட்டு  என்னை மட்டுமே சரண் அடைந்தவர்க்கு அவர்கள் பாவங்களில் இருந்து விடுவித்து மோக்ஷம் அளிப்பேன் , கவலைபடாதே . இப்பொழுது பகவத் கீதை ஒரே ஒரு சொல்லில் சொல்லவேண்டுமானால் அந்த ச்லோகத்தும் சுருக்கி கடைசி சொல்லான "மாசுச்ச ", அதாவது "கவலைபடாதே".   பகவத் கீதை ஒரு சொல்லலில் "கவலைபடாதே"!!

நான் மஹா பெரியவ சொன்னதும் , முக்கூர் சுவாமி சொன்னதும் combine  பண்ணி பார்த்தால் "கஷ்டபடு  !!  கவலைபடாதே!!" என்று வருகிறது

எனவே "கஷ்டபடுவோம் !! கவலைபடவேண்டாம்" என்பதே இதில் இருந்து விளங்குகிறது!!

ரங்கராஜன் 
ஸ்ரீவைஷ்ணவ அந்தணர்களின் ஒரு வம்சமாக "திருமலை ஈச்சம்பாடி" வருகிறது. இவர்களை ஈச்சம்பாடியார்  என்று அழைப்பது வழக்கம்.  இவர்கள் கௌண்டன்ய கோத்ரத்தை சார்ந்தவர்கள். கௌண்டின்ய கோத்ரத்திற்கு வசிஷ்டர் மூல ரிஷி. இப்பொழுது சற்றே விவரித்து கேள்வி பதில் மூலமாக அறிந்து கொள்வோம். முடிந்த வரை ஆதார பூர்வமான, பகுத்தறிவுடன் கூடிய ஒரு எழுத்து படிமம்

1. "திருமலை ஈச்சம்பாடி' வம்சம் பெயர் காரணம்?

"திருமலை" + "ஈசன்" + "பாடி" - திருமலை வாழ் ஈசனை பாடியவர்கள். பாடுதல் என்றால் ஓதுதல் என்ற பொருள் வைத்து கொண்டால், திருமலை ஈசனுக்கு வேதம் ஓதியவர்கள் என்ற பொருள் வரும். திருமலை வாழ் ஈசனுக்கு வேத பாராயண கைங்கர்யம் செய்தவர்கள்.  ஒரு சந்தேகம் வரலாம். "ஈசன்" என்றால் சிவ பெருமானாய் அல்லவா குறிக்கும்?திருவேங்கட மலையில் அருள் பாலிக்கும்  திருமால் "வேங்கட" + "ஈசன்" என்றே அழைக்க படுகிறார்.  இதற்கான ஆதாரம் ஆழவார் பாடல்களில் இருக்கிறது.
நம்மாழவாரின் திரு வேங்கடத்தான்  பாசுரங்கள்

"ஈசன் வானவர்க்கு என்பன்  என்றால்
அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்று மிலேன்
என்கண் பாசம் வாய்த்த பரம் சுடர் சோதிக்கே"

"தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் புகு குருகூர் சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இவை யாவும் வல்லார்
வாழவார் வாழ்வெய்தி ஞாலம் புகழ வே"

ஆகவே, திருமலை ஈசன் என்பது திருமலை வாழ் திருமால். அவரை வேதம் ஓதி போற்றியவர்கள், "திருமலை ஈச்சம்படியார்கள்"

2. வம்ச தொடக்கம் என்ன?

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த "அழகர் பிரான்"  என்கின்ற என்கின்ற "சுந்தரராஜன் சுவாமி" என்கின்ற "ஈசாண்டான்" என்பவரே இந்த வம்சத்தின் துவக்க ஆச்சர்யாராக போற்ற படுகிறார். இவர் "ஸ்ரீ ஆளவந்தார்"
என்ற "யமுனாச்சாரியார்" என்பவரிடம் "பஞ்ச சமஸ்கரம்" செய்த்தவர்". (சங்கு சக்ரங்கள் தோளில் தரிப்பது). இந்த மஹாசார்யர் இராமானுஜருக்கு "ஸ்ரீ நரசிம்ம மஹாமந்த்ரத்தை" உபதேசித்தவர் என்று நம்பப்படுகிறது. இந்த "அழகர் பிரான்" என்கின்ற "ஈசாண்டான்" கிரந்தங்களை செய்து இருக்கிறார் என்பது தெரிகிறது. அவை யாவும் தற்பொழுது  இல்லை.  ஆனால் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளிய "ஸ்ரீமத் ரஹஸ்ய  த்ரிய  ஸாரம் " என்ற மணிப்பிரவாள நூலில் "ஈஸான்டான் " அருளிச்செய்ததாக ஒரு ஸ்லோகத்தாய் குறியீட்டு காட்டுகிறார். 750 வருடங்களுக்கு முன்பு ஈஸாண்டான் எழுதிய நூல்கள் பயன்பாட்டில் இருந்து இருக்கின்றன என்பது தெரிகிறது.

ஈசண்டானுக்கு  இரண்டு மகன்கள். இருவரும் ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களை மாறினார்கள். ஸ்ரீ ராமானுஜர் 74 சிம்ஹசனாதிகளை விசிட்டாத்வைத சித்தாந்தத்தை பரப்புவதற்காக நியமித்தார். அந்த 74 ஆச்சார்யர்களில் இருவர் ஈஸாண்டனின் மகன்கள். இவர்கள் முறையே "ஈச்சம்பாடி ஆசான்" மற்றும் "ஈச்சம்படி ஜீயர்" என்று வழங்க பெற்றனர்.
இவையே இந்த வம்சத்தின் பூர்வ ஆச்சார்யர்களை பற்றிய உண்மைகள்

3.  ஆதி ஊர் எங்கே?

இந்த வம்சத்தை சேர்ந்த சிலர் இந்த வம்சத்தின் ஆதி ஊர் எது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். "ஈச்சம்பாடி"  என்பது அவர்கள் வாழ்ந்த இடத்தின் பெயராகவும் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஸ்ரீ. திருமலை ஈச்சம்படி ரங்கநாதாச்சாரியார் என்ற சவ்வாமியின் நியமனபடி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர், அவரின் சிஷ்யர்கள்.

அதன் படி தென் இந்தியாவில் உள்ள "ஈச்சம்பாடி" என்ற நான்கு ஊர்கள் கண்டு அறியப்பட்டன. அவற்றில் தர்மபுரி அருகில் உள்ள ஈச்சம்பாடி என்ற கிராமமும் , திருத்தணி அருகே உள்ள ஈச்சம்பாடி கிராமமும் தேர்ந்தெடுக்க பட்டன. கடைசியில் திருத்தணி அருகே உள்ள ஈச்சம்பாடி என்ற கிராமமே ஆதி ஊர் என்ற முடிவுக்கு வந்தனர்.


பின்வரும் காரணங்களினால் திருத்தணி அருகே உள்ள கிராமம் ஆதி ஊராக  இருக்கும் என்று தேர்ந்து எடுக்கப்பட்டது :

a . இந்த கிராமம் திருப்பதிக்கு அருகில் உள்ளது. திருவேங்கட முடியானை பாடியவர்கள் திருப்பதிக்கு அருகில் உள்ள கிராமத்தில் தான் இருந்து இருக்க கூடும்
b . இந்த இடத்தின் நீட்சியாக உள்ள சித்தூரில் "கௌண்டன்ய காடு" உள்ளது. (kounanya  wild life sanctuary) உள்ளது. இந்த காட்டில் கௌண்டன்ய மகரிஷி தவம் செய்ததாக நம்ப படுகிறது.  ஈச்சம்பாடி வம்சத்தினர் கௌண்டன்ய கோத்ரத்தை சார்ந்தவர்கள்.

இதன் அடிப்படையில் அந்த கிராமத்திற்கு சென்ற பொழுது ஒரு பாழ் அடைந்த பெருமாள் கோவில் இருந்தது. அநேகமாக பூமியில் புதைந்த நிலையில் இருந்தது. விசாரித்ததில் அங்க இருந்த பெருமாள் மற்றும் தாயார் பக்கத்தில் உள்ள ஒரு கோவிலில் தனியாக வைத்து பூஜை செய்து வந்து இருக்கிறார்கள். அந்த பெருமாள்  மற்றும் தாயார் புகை படத்தை எடுத்து ஸ்ரீ, ரங்கநாதர்ச்சரியரிடம் காட்டிய பொழுது, அது ஸ்ரீ விஜயராகவன் திருக்கோலம் என்று அருளினார்.

பின்பு கோவிலை சற்று தோண்டிய பொழுது சிலைகள் சில கிடைக்க பெற்றன. அதில் நம்மாழவார் தலை இல்லாதபடி ஒரு சிலையும் கிடைத்தது. இந்த இந்த நம்மாழவார் சிலை, காஞ்சிபுரத்தில் உள்ள நம்மாழவார் போன்று ஹ்ருதயத்தில் தன் திருக்கையை வைத்து இருந்தார். நம்மாழர்வரின் முதல் பதிகத்தில் வரும் "தொழுது எழுந் மனனே" என்ற வரி காஞ்சிபுரம் பேரருளாளன் எனும் வரதராஜனை குறிப்பதாக சொல்வர். அதன் காரணமாக நம்மாழவாவரின் திருமேனியின் திருக்கை ஹ்ருதயத்தில் இருப்பதாக பொருள். இந்த கிராமத்தில் கிடைத்த சிலையும் அவ்வாறே இருந்தது. ஆனால் அதன் பின்பு அந்த சிலை பற்றிய விஷயம் எனக்கு தெரிய வில்லை

பின்பு ஈச்சம்படி வம்சத்தினர் எல்லோரும் கூடி இந்த கோவிலை புனர் அமைத்து, புதிய மூலவர்களை பிரதிஷ்டை செய்து ஸம்ப்ரோக்ஷணம் சென்ற ஆண்டு செய்தனர். நான் இன்னும் அங்கு செல்ல வில்லை. புகை படத்தில் பார்த்த பொழுது , மிக அழகாக வயல்களும் தென்னை மரங்களும் சூழ்ந்த கொசஸ்தலை ஆற்று படுகையில் அமைந்து இருக்கும் கிராமம்


4. குடியபெயர்தல்?

ஈச்சம்பாடி வம்சத்தில் தற்பொழுது திருவெள்ளுர் , ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மதுராந்தகம், திருவஹீந்திரபுரம் (கடலூர்) மற்றும் தஞ்சை மாவட்டம் ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர் . மேல் சொன்ன வரிசை படி அவர்களின் குடிபெயர்தல் பல நூற்றாண்டுகளுக்கு அமைந்து இருக்கலாம் (Migration route).

தஞ்சாவூருக்கு தெற்கே யாரேனும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

மேலும் இந்த வம்சத்தை சேர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ அந்தணர்கள்  பெரும்பாலும் வடகலை சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களை இருக்கின்றனர். தென்கலை சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களாவும் சிலர் இருக்கின்றனர்.


இந்த எழுத்து படிமத்தை எழுதியதில் நோக்கம், இது ஒரு முக்கிய குறிப்பாக இருக்கும் என்பதால். Documentation நாம் பல செய்யாததால், பலவற்றை இழந்து இருக்கிறோம். அதனால் இதை பதிவு செய்கிறேன்

நன்றி
ரங்கராஜன்




தமிழ் கடலுக்கு இந்த நீர்த்துளியின் வணக்கம்
தங்கள் பேச்சினை 25 வருடமாக கேட்டு வருகிறேன்.
தங்களின் ஆழ்ந்த  நுண் அறிவை பார்த்து வியந்து இருக்கிறேன்

நீங்கள் இங்கே பதிவிட்ட விடயங்களில் என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன்

1. நாதஸ்வரம் தமிழ் திருமணங்களில் குறைந்து வருவது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய விடயம். மேலும் கோவில்களிலும் இப்பொழுது சண்டை மேளம் முழங்க ஆரம்பித்தது விட்டது. மிகவும் வேதனைக்குரிய விஷயம். மிக  சிறந்த இசை வல்லுநர்கள் நாதஸ்வரத்தில் தான் இருந்து இருக்கிறார்கள்.  சண்டை மேளம் பற்றி ஒரு சிறிய தகவல் உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். இது சரியா , தவறா என்று தெரிய வில்லை.
திருமழிசை ஆழவாரின் "நான்முகன் திருவந்தாதி" யில் பின் வரும் பாடல் வருகிறது . இந்த பாடலில் வரும் "ஓண  விழவில் ஒலி  அதிர" என்ற வரி சண்டை மேளம் முற் காலத்தில் இருந்திருக்குமோ என்ற ஐயம் வருகிறது. தங்களின் மேலான கருத்தை அறிய விழைகிறேன்.

    காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
    ஓண விழவில் ஒலியதிர, பேணி
    வருவேங் கடவா.என் னுள்ளம் புகுந்தாய்,
    திருவேங் கடமதனைச் சென்று. 41

2. தாங்கள் இங்கே "அவாளின் வழக்கம்" என்று ப்ராஹ்மண சமூகத்தை சொல்லி இருகிறார்கள். தங்களின் தமிழுக்கு அடிமையாய்  இருக்கும் என் போன்ற அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சற்றே வலியாகவும் , ஆச்சரியமாகவும் இருக்கிறது. ப்ராஹ்மண சமூகம் அனேகமாக பார்சி இனத்தை போல் தமிழகத்தில் குறைந்து விட்டது. என்னுடைய தாயாரின் கிராம அக்ராஹாரத்தில் 400 குடும்பங்கள் இருந்தன. இன்று இரெண்டே இருந்து குடும்பங்கள் மட்டுமே இருக்கிறது. அதிகப்படியான கலப்பு மணங்கள் நடப்பதும் இந்த சமுகத்தில் தான் . அனேகமாக இன்னும் 30 ஆண்டுகளில் தமிழ் ப்ராஹ்மண சமூகம் அழிந்துவிடும் என்பதே யதார்த்த உண்மை. இந்த நிலையில் தாங்கள்  இவ்வாறு கூறி இருப்பது சற்றே வருத்தமாய் உள்ளது. தங்களை போன்ற அறிவிலும், ஆற்றலிலும் , மன  உறுதியுலும் சிறந்தவர்களால் மட்டுமே சமூகத்தில் உள்ள பிரிவுகளை ஒன்று சேர்க்க முடியும். அதனால் இவாறான கருத்துகளை தயவு கூர்ந்து தவிர்க்குமாறு தங்கள் தமிழை உருக உருக கேட்கும் அடியேனுடைய கோரிக்கை.  தவறு இருந்தால் பிழை பொறுத்து மன்னிக்கவும்.



பருந்தின் கருத்து

பருந்தொன்னு பறக்குது ,
கருத்து ஒன்னு சொல்லுது
இறந்த பிணத்த  தின்னும் நாங்க
இந்த பிணத்தை உண்ண  வரல.

ஒட்டிப்போன கன்னத்தோட
விழுந்து கிடக்கான் நிலத்துல
நிலத்துல தான் ஈரம் இல்ல,
உங்க மனசுலமா  பாரம் இல்ல ?

பாயும் நதி நீரு போச்சு,
சாயம் கலந்த நஞ்சு ஆச்சு,
மேயும் அந்த மாடு போச்சு
விவசாயம் இங்க படுத்து போச்சு

வானத்துல வந்த கங்கை
சேர்ந்தது சிவன் தலையில
தலையை சாச்சி அனுப்பி வெச்ச
இங்க கொஞ்சம் தேவல

வானம் வறண்டு போனதால
பூமி இங்க காஞ்சி போச்சு,
மேகம்  பாத்து நாளும் ஆச்சு
போகுதே  இவங்க மூச்சு

வெறும் சோத்துலேயும் உப்புருக்கு
வேர்வை  அதிலே ஒளிஞ்சு கிடக்கு
வேர்வை வந்த தேகம்  இப்போ
பூமியிலதான் விழுந்து கிடக்கு


தின்ன வந்த பருந்து நாங்க
தின்னாமல் போகிறோம்
உப்ப இட்ட தேகத்துக்கு
ரெண்டு சொட்டு நீரு  விட்டு

பறந்து செல்ல பார்க்கிறோம்
பாரம் ரொம்ப  ஆனதால
மனசு இன்னும் ஆறல
பறக்கவும் தான் முடியல


பருந்தொன்னு பறக்குது !
கருத்து ஒன்னு சொல்லுது !

- அரங்கராசன்



 
                                                       
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய எளிய வேறுபாடுகள்


 தலைப்பு 
 வடகலை 
 தென்கலை 
 குறிப்பு 
 ராமானுஜர்
 உண்டு
 உண்டு

 கூரத்தாழ்வான்
 உண்டு
 உண்டு

 பராசரபட்டர்
 உண்டு
 உண்டு

 வேதாந்த தேசிகன்
 உண்டு
 இல்லை
  •  தென்கலையார் ஸ்ரீபாஷ்ய மற்றும் கீதா பாஷ்ய காலக்ஷேபங்களில் "ஸ்ரீமன் வேங்கடந்தர்ய தனியன்" அனுசந்திக்க வேண்டும் 
  • மணவாள மாமுனிகள் தேசிகனை "அபியுக்தர்" (போற்ற தன்குந்தவர்) என்று ஸ்ரீவசன பூஷண வ்யாகனத்தில் கூறுவதாக சொல்லுவது உண்டு 
  • தென்கலையார் தேசிகனை "வேடந்தாச்சார்யார்" என்று அழைப்பது உண்டு 

 நம்பிள்ளை, நந்ஜீயர் 
 இல்லை 
 உண்டு 
  • அஹோபில மட பரம்பரையில் பகவத் விஷய காலக்ஷேப ஆச்சார்யாள் வம்சத்தில் உண்டு  

 எம்பார் 
 இல்லை 
 உண்டு 

 திருக்குருகை பிள்ளான் 

உண்டு 

உண்டு 
  • வடகலையில் பகவத் விஷய காலக்ஷேப ஆச்சார்யாள்  பிரதானமானவர்  

 ஸமாச்ரயணம் (பஞ்சசமஸ்கரம்) 
 உண்டு 
 உண்டு 

 அஷ்டாக்ஷர ஜபம் 
 உண்டு 
 இல்லை 


 4 முறை சேவிப்பது 
 உண்டு 
 இல்லை 

 1 முறை சேவிப்பது  
 இல்லை 
 உண்டு 

 சாதத்திற்கு மட்டும் பரிசேஷணம் 
 உண்டு 
 இல்லை 

 அனைத்து அமுதும் இலையில் செய்த பிறகு பரிசேஷணம் 
 இல்லை 
 உண்டு 
  • தென்கலை: உப்பு கலந்த உணவு இலையின் மேற் பாதியிலும், சாதத்தை இலையின் கீழ் பாதியிலும் சேர்க்க வேண்டும். அப்பொழுது சாதத்திற்கு பரிசேஷணம்  

 யதிகள் முட்டிக்கு கீழே சரிகையோடு சேர்ந்து காவி வேஷ்டி கட்டுவது 
 இல்லை 
 உண்டு 

 யுத்திகள் முட்டி வரை மட்டுமே வேறு சரிகை இல்லாமல் காவி வேஷ்டி கட்டுவது 
 உண்டு 
 இல்லை 

 திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் 
 இல்லை 
 உண்டு 

 கைசிக புராணம் 
உண்டு  
 உண்டு 

அனைத்து ஆழவார்கள் 
 உண்டு 
 உண்டு 

ராமானுஜரின் ஒன்பது நூல்கள்  
 உண்டு 
 உண்டு 

 ஆறாயிரப்படி (திருக்குருகை பிளான்) - ஆழ்வார் பிரபந்தங்களை மணிப்பிரவாள வ்யாக்யானம் 
 உண்டு 
 உண்டு 

 நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் (ஆழ்வார் பிரபந்தங்களுக்கு 
 இல்லை 
 உண்டு 
  • அஹோபில மட சம்பிரதாயத்தில் ஈடு வ்யாக்யானம் உண்டு 
  • தேசிகனின் எழுபத்தி ஆயிரப்படி வ்யாக்யானம் "நிகம பரிமளம்" கிடைக்காமல் போனது 
  • உத்தமர் வீரராகவாச்சார் ஸ்வாமியின் "பிரபந்த ரக்ஷை" நம்கானது. ஈடு வ்யாக்யானத்தில் சம்பிரதாயத்துக்கு ஒத்த வ்யாக்யானங்களை ஏற்றுக்கொண்டது  

 ராமானுஜர் கோவில் கோபுரத்தின் மீது அமர்ந்து அஷ்டாக்ஷரத்தை உலகம் சொன்னது 
 இல்லை 
 உண்டு / இல்லை 
 ஆச்சாரமான தென்கலையர்கள் இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்வது இல்லை 
 தேசிகன் மீண்டும் திருஅத்யான உற்சவத்தை ஸ்ரீரங்கத்தில் ஆரம்பித்தது 
 உண்டு 
 இல்லை 

 மணவாள மாமுனிகள் 
 இல்லை 
 உண்டு 

 மஞ்சள் ஸ்ரீசூர்ணம் 
 உண்டு 
 இல்லை 

 சிகப்பு ஸ்ரீசூர்ணம் 
உண்டு  
 உண்டு 

 இடுப்பு (ஜப ) வேஷ்டி, பிஷ்டத்தை சுற்றாமல் கட்டுவது 
 உண்டு 
 இல்லை 

 இராமானுஜரின் தானான திருமேனி (ஸ்ரீரங்கத்தில்)
 இல்லை 
 உண்டு 
 வைதீக சமயத்தை மீது எடுத்தவர் ராமானுஜர். அவர் திருநாட்டுக்கு எழுந்து அருளிய பிறகு வைதீக தர்மப்படி அந்த திருமேனிக்கு செய்ய வேண்டிய காரியங்கள் நடந்து இருக்கும். திருமேனியை சந்நிதியில் சிலையாக கண்டிப்பாக எழுந்து அருள செய்து இருக்க மாட்டார்கள் 
 மஹாளய பட்சம் 
 உண்டு 
 இல்லை 





வடகலை தென்கலை 

ராமானுஜ சித்தாந்தத்தின் இரு முக்கிய பிரிவுகள். வடகலை, தென்கலை. 
இது ஏதோ வெறும் திருமண காப்பில் உள்ள வேறுபாடு கிடையாது. இந்த பிரிவுகள் மிக நுண்ணிய தத்துவ வேறுபாடுகளின் இரு வேறு நிலைப்பாடு. ராமானுஜர் காலத்திலேயே அவர்களின் சிஷ்யர்களில் இரு வேறு வேறுபாடு இருந்ததாக கூறுவர் . பிற்காலத்தில் பிள்ளை லோகாச்சார்யார்  மற்றும் வேதாந்த தேசிகன் என்று இரு ஆச்சார்யர்கள் காலத்தில் அவை மேலும் வலுவடைந்தது. 

இந்த இரு தத்துவ நிலை படும் மிகவும் நுண்ணியமானது. இரு பிரிவுக்கும் இடையே 18 தத்துவ வேறுபாடுகள் உள்ளன 

அவற்றில் முக்கியமானதை இங்கே எனக்கு தெரிந்த அளவில் எழுதி உள்ளேன் 

1. சரணாகதி  : ராமானுஜ தத்துவத்தின் சாரமே சரணாகதி . பக்திக்கும் சில அங்கங்கள் உண்டு. ஆனால் சரணாகதி என்பது எல்லவற்றும் விடுவித்து அவனை சரண் அடைவது. பகவத் கீதை சுலோகம் "சர்வதர்மான் பரிதித்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ , அஹம் தவா சர்வ பாபேயோ மோக்ஷ்ய் யாமி மாசுச்சா:" - எல்லா தர்மகளில் இருந்தும் விடுத்தது, என்னை மட்டுமே சரண் அடைந்தால் எல்லா பாவங்களில் இருந்தும் விடுவித்து மோக்ஷத்தை அருள்வேன், கவலை படாதே". இது சரம ஸ்லோகம் என்று வைணவர்களால் பெரும் போற்ற படுகிறது. இது பகவத் கீதையின் சாரமாக போற்ற படுகிறது. 
இங்கே சொல்லப்படும் சரணாகதியை ராமானுஜரின் சித்தாந்தம் ஆணி வேர் ஆகும் 

1. இறைவன் யார்?
2. நாம் யார்?
3. இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு என்னை ?
4. இறைவனை நாம் அடையும் வழி என்ன?>
5. இறைவனை நாம் அடைய தடைகளை உள்ளவை என்ன?

இவர் "அர்த்த பஞ்சகம்" என்று போறும். இந்த அர்த்த பஞ்சகம் மேல் உள்ள கீதை ஸ்லோகத்தின் மூலமாக விடை கிடைக்கும் 

1. இறைவன் யார்? மோக்ஷத்தை அளிப்பவன், சரண் அடையக்கூடிய ஒரே பரம் பொருள் . பரம கருணை உள்ளவன். 

2. நாம் யார்?  சரண் அடைய வேண்டியவர்கள். கர்மத்தால் கட்டுண்டவர்கள் 

3.  இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம் -  அவன் பரம் பொருள், நான் ஜீவன்.  அவன் கர்மா வய படாதவன் . நாம் கர்மா வய பட்டுள்ளோம். அவன் நம் கர்மத்தை போக்க வல்லவன். அவன் நமக்காக இறங்கி வந்து நாம் அவனை அடையவும் , அவனுக்கும் நமக்கும் உள்ள இணை பிரியா சம்பந்தத்தை தெளிவு படுத்தினான் 

4. இறைவனை அடைய வழிகள்? சரணாகதி 

5.இறைவனை நாம் அடைய தடைகள்? நம்முடைய கர்மங்கள்,  நாம் அவனை பற்றாதது 


சரணாகதி என்பது பிரபத்தி என்றும் வழங்க புடும். வைணவத்தில் இறைவன் பரம காருணிகனாக, நாம் எல்லோரும் தன்னை  அடைய வேண்டும் என்ற பரிபூர்ண எண்ணம் உடையவனாக, தயையின் முழு உருவமாக இருக்கிறான்.

இப்பொழுது இரு பிரிவுகளின் வேறுபாடுகளுக்கு வருவோம்.

வடகலை: இறைவன் திருவடி அடைய சரணாகதி என்பது முக்கியம். நாம் நம்முடைய எல்லா கர்மங்களும், அதன் பலனையும் விடுத்தது (Resignation from all ) அவனை சரண் அடைவோம்.  ஆனால், அந்த பற்றுதலேய ஒரு காரணமாக கொண்டு இறைவன் நம்மக்கு மோக்ஷம் அளிப்பான். அதாவது, நம்முடைய சரணாகதி என்ற செய்கையின் பிரசாதமாக இறைவன் மோக்ஷத்தை அளிப்பான். மோக்ஷதை அதைவதற்கு இந்த சரணாகதி காரணம் ஆகிறது. "சஹீதுக கிருபா". சரணத்தை காரணமாக வைத்து இறைவனின் மோக்ஷம் அருளுதல். 

தென்கலை: நம்முடைய சரணாகதி (Resignation from all ) மோக்ஷத்தை ஒரு அங்கமே தவிர்த்து, அதுவே மோட்சத்தை அருளாது . நாம் சரணாகதி மட்டுமே செய்ய கடமை பட்டுள்ளோம். இறுதியில் இறைவனின் அருளே இதில் முடிவானது. எந்தவித வேண்டுதலும் இல்லமால் அவனை சரண் அடைய வேண்டும். இறைவனே மோக்ஷம் அளிப்பதற்கான காரணம், நாம் செயும் சரணாகதி அல்ல. சரணாகதி ஆத்மாவின் இயல்பானது. மோக்ஷம் இறைவனின் முடிவு. அவனை சரணாகதி கட்டுப்படுத்தாது. நாம் செயும் சரணாகதி "ஏரி " வெட்டுவது போல். "ஏரி " வெட்டுவது மழை பெய கரணம் ஆகாது". நாம் செயும் சரணாகதி என்பது "ஏரி" வெட்டுவது போல். "மழை" எனப்து இறைவனின் கருணை. மோக்ஷம் என்பது "சஹீதுக க்ருபா" அல்ல, இறைவனின் "நிர்ஹேதுக க்ருபா" (எந்த வித காரணமும் இல்லாமல் இருக்க கூடிய கருணை). சரணாகதி ஒரு காரணம் அல்ல. இறைவனே இறுதி முடிவு செய்யபவன் 

.....தொடரும் 









கச்சி அருளாளனும் அருளிச்செயலும்

தேசிக பிரபந்தம் ஏன் அருளாளன் சந்நிதியில் அருள்செய படவேண்டும்?

கச்சி பேரருளாளன் பற்றிய முழு பதிகம் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இல்லை. "அத்தியூரான்" என்ற ஒற்றை வரி கச்சி பேரருளாளனை திவ்ய தேசத்தில் சேர்த்தது. ஆழவார்கள் அனைவரும் அவன் திருமுக மண்டலத்தில் ஆழ்ந்ததினால் வாய் மொழியாக பதிகங்கள் அருளியது இல்லை. அழகின் அவ்வளவும் ஆன திருமுக மண்டலம் அருளாளனுக்கு

அருளாளனின் அருளை, கூரத்தாழவன் , தேசிகன் மற்றும் மணவாள மாமுனிகள் தங்களின் வட மொழி பாடல்களால் துதித்து இருக்கின்றனர். ஆனால் பெருமாளுக்கு பதிகமாய் இருப்பது தேசிகனின் ஆறு அருளிச்செயல்களே. உயும் ஆறு அருளியவனுக்கு ஆரண தேசிகன் ஆறு திருப்பதிகங்கள் அருளி செய்து இருக்கிறார். அதனால்,  அருளாளன் பற்றிய பதிகங்கள் தேசிகனால் அருள செய்யப்பட்ட இவை மட்டுமே. அவனை பற்றி பாடிய பதிகங்களை அவன் முன் அனுசந்தானம் செய்வது மிகவும் பொருத்தமானது. அவனை பற்றிய பதிகங்கள் அவன் முன் அனுசந்தானம் செய்யாமல் இருப்பது பொருந்துமா?

எனவே, அவனை பற்றி இருக்கும் தமிழ் பதிகங்கள் தேசிகனால் அருள பட்டவை மட்டுமே. அவைகள் அவனை குளிர்விக்கும். அவனை பற்றி பாடிய பாடல்கள் அவன் முன்  பாட பட வேண்டும்

இதில் உரிமை, ஆச்சாரியார் என்ற வித்யாசம் பார்க்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, அவன் மனம் குளிர அவனை பற்றிய பாடல்களை ஓத ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்

பெருந்தேவி தாயார்  பேரருளான் திருவடிகளே சரணம்

-- ரங்கராஜன்