Thursday, 22 June 2017

சில்லறை கலவரங்களில் நம்பிக்கை இல்லாதவர் தான் சில மாதங்களுக்கு முன்பு "வங்கி ஊழியரை வெளியேற்றவேண்டும்" என்று கடுமையாக பேசினார். ஜெயமோகன் நிதானமாக யோசித்து அந்த விஷயத்துக்கு தீர்வு எடுத்து இருக்கலாம். இந்த சிறு விஷயத்துக்கே இவ்வாறு பேசியவர் மிக பெரிய விடுதலை போராட்டத்திற்கு அக்னி குஞ்சு போன்ற இந்த சம்பவங்களை சில்லறை கலவரங்கள் என்று பேசுவது அவரின் உணர்வு இல்லா அறிவை நமக்கு அறிமுக படுத்துகிறது. உணர்வு இல்லா  அறிவு அறிவீனம்.

Sunday, 14 May 2017

முன்னை வினை பயன்; ஈன்றாள்
என்னை, என உருகும் அன்னை!
பின்னை வினை ஆகுமே பொய்;
கண்ணீர் வடியாக்  கால் !


பிறப்புதவி செய்யும் கால்

இன்னுயிர் நீத்த பின்னே
திதி வைத்து துதி பாடு
எனும் நாட்டினிலே,
மதி இழந்து மாசு பெருத்து
மாதாவை நினைக்கும் நாள்
என்றொன்று வைத்தனரே !

மசியல் சோறு  உருட்டி,
சுண்டை  காய் பிசைந்து
வெண்டை அதில்  சொருகி
வட்டமா  அமர்ந்து  கிட்டு ,
அன்னை அவள் கையால்
வாங்கிய உருண்டை சோறு !

கட்டவேண்டும் வீடு என
தந்தை திட்ட மிட்ட போது 
கயிலதான் காசு இல்ல - பின்
இவ கையிலதான்  வளையல் காண வில்ல

தங்கத்தை தான் இவோ  வெறுத்தா
தான் பெத்த பசங்கள தங்கமாவே நினைச்ச






சதை  தோய்ந்து உடல் தேய்ந்து


Saturday, 15 April 2017

பஞ்சமர்  இறை பஞ்சம் நீக்க,
தஞ்சம் அடைந்தார்க்கு செய்தார் பஞ்சமம்
இராமானுசன் !!

Thursday, 12 January 2017

மதில் கச்சி ஊரதனில் 
மலை உச்சி தேரதனில் 
தலை பட்சி வந்து அதனில் 
அமர்ந்தது பார் முதல் 

திருவாய் குமிழ்  அழகுதனில்  
இமைக்க  மறந்த கண்ணதனில்  
என்உளம்  காதல் கொண்டதனில் 

திரு சாயும் மரு  அதனில் 
மரு  தாங்கும் மார்புதன்னில் 
மயங்கிய மனம் சென்றதனில் 

சக்கரை பாகு அதனில் , தெள்ளிதிட்ட தேன் அதனில் 
தோய்த்திட்ட சுளையதனில் ,நா கசந்ததனில் 
உன்  சுவை அறிந்ததனில் 

உன் திருவிழி  கண்டதனில், 
என்  கேடு  விதி தீர்ந்ததனில் ,
உன்  திருவடி அடைந்ததனில்
என் கடை வழி தெளிந்ததனில் .

வரதனை கண்டதனில் ,வாய் சேர் உப்பு நீர் அதனில் 
என்ன உளம் குழைந்ததனில் 
இரு கை தொழுததனில்  , இருக்கை மறந்ததனில் 
பிறப்பை வெறுத்ததனில், இறப்பை வென்றதனில் 
கண் இரண்டும் அழுததனில் 

வரதனை தொழுததனில் !! வரதனை தொழுததனில் !!


 


Friday, 6 January 2017

கடமையை   செய்யாதவன் பிரார்த்தனை ஒலிக்கு 
இறைவன் செவி செவிடாக்கும்