Thursday, 12 January 2017

மதில் கச்சி ஊரதனில் 
மலை உச்சி தேரதனில் 
தலை பட்சி வந்து அதனில் 
அமர்ந்தது பார் முதல் 

திருவாய் குமிழ்  அழகுதனில்  
இமைக்க  மறந்த கண்ணதனில்  
என்உளம்  காதல் கொண்டதனில் 

திரு சாயும் மரு  அதனில் 
மரு  தாங்கும் மார்புதன்னில் 
மயங்கிய மனம் சென்றதனில் 

சக்கரை பாகு அதனில் , தெள்ளிதிட்ட தேன் அதனில் 
தோய்த்திட்ட சுளையதனில் ,நா கசந்ததனில் 
உன்  சுவை அறிந்ததனில் 

உன் திருவிழி  கண்டதனில், 
என்  கேடு  விதி தீர்ந்ததனில் ,
உன்  திருவடி அடைந்ததனில்
என் கடை வழி தெளிந்ததனில் .

வரதனை கண்டதனில் ,வாய் சேர் உப்பு நீர் அதனில் 
என்ன உளம் குழைந்ததனில் 
இரு கை தொழுததனில்  , இருக்கை மறந்ததனில் 
பிறப்பை வெறுத்ததனில், இறப்பை வென்றதனில் 
கண் இரண்டும் அழுததனில் 

வரதனை தொழுததனில் !! வரதனை தொழுததனில் !!


 


No comments:

Post a Comment