மேற்கில் உதயமாகிறது சூரியன்
அந்த மலைகளின் சரிவில்
புயலில் ஆடும் மரம் போல் சாயும் கேசம்
அந்த ரயில் பயணம்
ஹைக்கூவா என்று தெரியாத வரிகள்
மேற்கில் சூரிய உதயம்
மலைகளின் சரிவில்
ரயில் பயணம்
என இளவயது மனது
பிறக்காத பெண்களின் மீது
காதல் கொள்கிறது
நாற்றம் இல்லா இடம்
புழுக்கைகள் இல்லை!!
காய்ந்த புற்கள்
மழை நின்று விட்டது
குடையை விரித்தேன்
பசுமையான மரங்கள்
அழகான நிலவொளி
அந்த குட்டையில்
ஆனந்தத்தில் முதியவர்
பக்கம் பக்கமாய் புரட்டப்படுகிறது
மிச்சமாகும் எச்சில் துளிகள்
IPAD
வேக வேகமாய் உழைக்கிறார்கள்
வயிற்று பசிக்காக
SWIGGY
புல்கள் இல்லாததால்
ஊரு !!
ஒல்லியாக இருந்த பொழுது "டா" என்று அழைத்தவரால் , "ங்க " என்று அழைக்கிறார்கள் ! மரியாதையும் பெருத்தது !
கைக்குழந்தையாக பார்த்தவர்களின் , கையில் குழந்தையுடன் !
பெரிய காதால் கேட்கும் சைக்கிள் கடைக்காரர் செவிடாய் போய் இருந்தார் !!
குள்ளமானவர்கள் நீண்டு இருந்தார்கள், நீண்டு இருந்தவர்கள் அகலகமாய் ஆகி இருந்தார்கள் !!
பூக்காரம்மாவின் கறுத்த தலை முடி உதிராமல் உதிர்ந்து இருந்து இருந்தது !!
பரிச்சயமான அந்த டைலரின் முகத்தை பார்த்தேன் !! பேசாமல் நிலைத்து இருந்தார் !!
ரெட்டை ஏரியில் இன்னும்மும் தண்ணீர் இருந்தது, வீடுகளின் குழாய்களில்!!
தெருவில் நடந்து கொண்டிருந்த சிலர், இன்னும்மும் நடந்து கொண்டு இருந்தார்கள், வீட்டினுள்ளே !!
மற்றபடி மாற்றம் ஒன்றும் இல்லை
இந்த குளத்தில் ஒரே ஒரு மீன்
பயம், அன்பு , வலி, ஏக்கம்
ஆற்றோரம் மணல் எடுத்து அழகாகாய் வீடுகட்டி அன்று ,
ஆற்றினிலே மணல் எடுத்து அடுக்கடுக்காய் வீடு கட்டி இன்று,
மணலில் அன்று இருந்தது; மனங்களில் இல்லை, இன்று.
ஈரம் !
வயிற்றுக்கு சோறிட்டவர்கள் வாயில் அரிசி
வியர்வை உப்பை தந்த உடல் இன்று கண்ணீர் உப்பில்
அழுது அழுது கண்களும் நிலம் போல் வறண்டது
வானமே !! இவர்கள் கண்ணீரை துடைக்க நீ கண்ணீர் சிந்து