மொழிக்கெல்லாம் மூத்தவளே , மூப்பரியா இளையவளே
நாவின் உள் செல்லும் உணவோ வயிறுக்கு குளிர்மை
நாவின் வெளி செல்லும் பாவோ மனதுக்கு இனிமை
உன்னை சொல்லின் என் எச்சிலும் ஆகிறது புனிதம்
குறளாய் நீ வந்து சொன்ன மனிதம்
மனிதன் போற்றும் புனிதனும், உன் பின் செல்கிறான்
மாயத்தை தோற்று வித்தவன் மயங்கி நிற்கிறான்
என்றும் மறையாத மறை
மறை போற்றும் மாபெரும் இறை
இறை வணங்கும் நீ எனக்கு பறை
யாரும் இல்லா பொழுதினில் என் அகத்தில் நீ இருக்க
புறமானாய் நீ எனக்கு பேச்சின் காற்று வெளி வர
மொழி பேசா மௌனத்தில் ஞானம் மலரும்
மொழியே ஞானமாய் நீ இருக்க
மௌனத்தின் ஞானமே அஃஞானமாய் ஆனதே
கவிகள் எல்லாம் அலங்கரித்த உன் அழகை
கணினிகளும் காண துடிக்கின்றன
அறிவியலும், பொறியியலும் உன்னை தரிசிக்க இருக்கின்றன
வானியலும் கோளியலும் உன் வரும் திசையை நோக்கு கின்றன
சுண்ட காய்ச்சிய பாலில் திரண்டு வரும் பாலாடையில்
சக்கரையின் பாகு கலந்து, குங்கும பூ மேலிட்டு
பக்குவமாய்க்கு ருசிக்க நாவுக்கு இனிமையோ?
இல்லை
"தமிழ்" என்று என்று ஒரு வார்த்தை போதும் எனக்கு
வையத்தின் முழு அமிர்தம் என் நாவில்

No comments:
Post a Comment