ஒரு எண்ணம்:
"Salary Bandhitha" என்று அந்த இளநீர் விற்பவர் ஒரு கணவன் மனைவியிடம் இளநீர் வெட்டி கொடுத்துக்கொண்டே சிரித்து பேசி கொண்டு இருந்தார்.
தென்னை குலையில் இருந்து கொலை செய்யப்பட்ட பல இளநீர் தேங்காய்கள் அந்த மரத்தடியில்.
எனக்கும் தாகம் எடுக்க, தண்ணீர் மட்டுமே உள்ள காய் வாங்கி குடிக்கும் நான், முன் நாள் கேட்ட ஒரு ஒளி பதிவில், இளநீரில் உள்ள வழுக்கையோடு உண்பது வயிற்றில் உள்ள புண்களுக்கு நல்லது என்பது நினைவுக்கு வர , "ganjee காய் இதியா " என்று கேட்டேன்.
பின்பு "சரி , தண்ணி காய் குடுங்கம்மா" என்றேன், நகை இல்லா கழுத்தில் மஞ்சள் தாலி கண்டவுடன்.
"தமிழங்கா " என்றார் அந்த அம்மா?
"ஆமாங்க" என்றேன்
"எந்த ஊரு ?" என்றார்கள்
"Madrasamma , ஒன்னு இங்க குடிக்க , ரெண்டு parcel , நீங்க எந்த ஊரு ?" என்றேன்
"தர்மபுரீங்க " என்று ஒரு இளநீர் வாயை பிளந்தாள்
"தரமபுரியேவா? Straw வேண்டாங்க, அப்பிடியே குடிக்கிறேன்" என்றேன்
"இல்லங்க, அதியமான் பேட்டை, தர்மபுரீலேந்து சேலம் போற வழி, கேள்வி பட்டு இருக்கீங்களா? இங்க வந்து 14 வருஷம் ஆச்சு" என்றாள்
"கேள்வி பட்டது இல்லீங்க, ஆனால் நிறைய பேரு இங்க தர்மபுரிலேந்து இருகாங்க" , "உங்க பசங்க படிக்கறாங்களா?" கிட்டதிட்ட எல்லா அடித்தள மக்களை நான் கேட்கும் கேள்வி.
"ரெண்டு பொண்ணுங்க.ஆமாங்க, படிக்கறாங்க. இங்கிலீஸ் Medium ஆனா தமிழ் ஒரு பாடம் உண்டு"
ஆச்சர்யத்துடன் நான். "இங்க ஸ்கூல்ல தமிழ் சொல்லி கொடுக்கறாங்களா?"
"உண்டுங்க, இங்க தியாகராஜ நகர் ஸ்கூல்ல சொல்லிக்கொடுக்கறாங்க"
"Govt ஸ்கூலாங்க ?"
"ஆமாங்க, உங்க பசங்க எங்க படிக்கறாங்க?"
"மல்லசந்தரல படிக்கறாங்க"
"இந்தாங்க பார்சல் இளநீர், மூணு இளநீர், 105 ரூபா".
சரியான சில்லறை கொடுத்தேன்.
தமிழ் மொழிக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகள் உள்ளனவே! ஞான பீட விருது பெற்றோரில் மாஸ்தியின் தாய் மொழி தமிழ் ஆயிற்றே? மேலக்கோட்டையில் ஆழவார்கள் திருவாய்மொழி ஓத படுகிறதே?
தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள் தலையில் இவை ஏற்றப்படவேண்டும்
அதேபோல், உகாதிக்கு தமிழ்நாட்டில் பொது விடுமுறை, திராவிட இயங்கத்தின் தலைவர் பெரியார் ஒரு கன்னடிகர், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஞானக்கூத்தன் கன்னடிகர். உலகமே போற்றி வணங்கிடும் காஞ்சி மஹாஸ்வாமிகள் பூர்வர்கள் ஹொய்சால கன்னட ப்ராஹ்மணர்கள்.
இவை யாவும் கர்நாடகாவில் உள்ள கன்னடிகர்களின் செவியில் படிய பட வேண்டும்
சாளுக்யனும் பல்லவனும் சண்டை இட்டது ஒரு அதிகார போட்டி. மொழிகளின் போட்டி அல்ல. மக்களுக்குள் ஆனா போட்டி அல்ல. இவையே இன்றும் தொடர்கிறது
மொழி என்பது என்ன? எண்ணங்களின் வெளிப்பாடு. மொட்டில் இருந்து மகரந்தங்கள் வெளியேறுவது போல், அந்த வெளிப்பாடு அலங்கரிக்க படும்பொழுது அழகிய இலக்கியம் ஆகிறது. இதில் எண்ணமே அடிப்படை
காஞ்சி மஹாஸ் வாமிகள் "மனத்துக்கண் மாசிலன் ஆதல்" என்ற குறள் இறை பக்தியின் விளைவு, மனம் மாசற்றதாக வேண்டும் என்று அருளி இருக்கிறார்
எனவே "மனத்துக்கண் மாசிலன்" வெளிப்படுத்தும் மொழி எதுவாக இருந்தால் என்ன? மனதின் தூய்மை, தெளிவான எண்ணங்களின் வெளிப்படுத்தல் முக்கியமே தவிர மொழி அல்ல.
நீருக்கான போராட்டம், மொழியின் மீது கல் எறியப்பட்டு , மக்களின் போராக மாற்றும் . மேலே சொன்ன ஒரு சம்பவம், தமிழ் மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும்.
எண்ணங்களின் செழுமையே செழுமை அல்ல
மொழியின் பழமை மட்டும்