Tuesday, 19 August 2014

கங்கை கொண்டானை ! மால் தான் தங்கை கொண்டானை!!
முப்புரம் எரித்த முக்கண்ணனை!!
பிறை சூடனை !! மறை போற்றும்  வேந்தனை!
நம் நெஞ்சம் கறை போக்கும் நாதனை!
தன்  கால்  அணைத்த பாலனை ; காலனை அழித்து அணைதானை !
மாலனும்  மால் மகனும் தன் அகத்துளே உடையானை !
ஆதி  கருவானை !! கருகாவூர் நாயகி மனம் கவர்ந்தானை !
பூசலனையும் தன்னை எசுவனயும் நேசிக்கும்  நிலாதுண்டனை !
நன்னெறி வழுவா தொண்டர்கள் பாவம் கழுவும் மழுவானை !
விடை ஏறும் வாழ்வின் விடையை!
தடை போக்கும் தயாளனை !
நாவிற்கினிய தேனை ! நினைந்து நினைந்து அழுதேன்!தொழுதேன்!

ஒருவனோ மகாகவி !! மற்றவனோ மாமேதை !!

'கணக்கு எனக்கு ஆமணக்கு' என்று கவி பாடினான் ஒருவன்!!

'கணக்கு எனக்கு ஆ! மணக்கும்'  என்றான் மற்றவன்!!

ஒவ்வையின் விளக்கம் இவர்கள் வாழ்வு!! 'எண்ணும்  எழுத்தும் கண்ணென தகும் ' - ஒருவன்க்கு எண் கண் ! மற்றவனுக்கு எழுத்து பண் !!

நாமகிரி தாயின் தயவில் இவன் ! பராசக்தியின் பரிவில் அவன்!!

கண்ணன் அவன் காதலன் !! கணிதம் இவன் காதலி!!

குடந்தையும் எட்டயபுரமும் கொடுத்த எட்டாத கனிகள்!!

காவிரியும் தாமிரபரனியும் விளைவித்த நெல் மணிகள்!!

பேனாவும் பேப்பரும் இவர்கள் கரத்தின் அங்கங்கள்!!

விடுதலை வேட்ட்கை ஒருவனிடம்!! தணியாத கணித தாகம் மற்றவனிடம்!!

தன் -மக்கள் மறந்து தன் -மக்களையே  நினைத்தான் ஒருவன்!! தன்னையே மறந்தான் மட்ட்றவன்!!

வீடில்லை !! சோறில்லை !! சோர்வும்  இல்லை !!

இருவரும் பேசிகொண்டது இல்லை!! இருவரையும் உலகம் பேசுகிறது!!

ஒட்ட்ருமை உண்டு இவர்களுக்கு , காலன் இவர்கள் காலத்தை சுருக்கி விட்டான் !!

அகவை முப்பது !! அஸ்தமனமானது இந்த அறிவு சுடர்கள்!!

முடிவிலியை அறிந்தவர்கள் முடிவிலியை அடைந்தார்கள்!!

பாரதி !! ராமானுஜன்!!