Sunday, 4 September 2011

தமிழும் ஹிந்து மதமும்

தமிழுக்கு ஹிந்து மதம் என்ன செய்தது? ஹிந்து மதத்துக்கு தமிழ் என்ன செய்தது? மதம் என்பது மொழிகளோடு சம்பந்த பட்டது. யூதர்களுக்கு ஹீப்ரு மொழி புனிதமானது. இஸ்லாமியர்களுக்கு அராபிய மொழி புனிதமானது. புத்தகளுக்கு பாலி மொழி புனிதம். ஹிந்துக்களுக்கு சமஸ்க்ரிதம் புனிதம். ஆனால், தமிழுக்கு ஹிந்து மதத்தில் ஒரு இடம் உண்டு. தமிழ் மக்கள் தங்கள் நிலம் சார்ந்த கலாச்சாரத்தில் ஹிந்து மத கடவுள்களை அந்த நில தெய்வமாக வணங்கி வந்தனர். அந்த தெய்வங்கள் எல்லாம் ஹிந்து மத தெய்வங்களே. ஆகம படி இருக்கும் தெய்வங்களும், ஆகமத்தில் சேராத கிராம தெவதைகளும் தமிழ்நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மக்களால்  வணங்க பட்டு வருகின்றனர். இவை எல்லாமே இந்து மதத்தின் ஒரு பகுதியே. தமிழ் கலாச்சாரம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக, ஹிந்து மதத்தின் கோட்பாடுகளை தன அகத்தே கொண்டதாகவே இருக்கிறது. இடையில் ஏற்பட்ட சமண, புத்த மதங்களின் தாக்கம்  பாரதத்தின் மற்றைய பகுதிகளில் இருந்த பொது, தமிழகத்திலும் தாக்கம் இருந்தது.

ஹிந்து கடவுள்கள் தமிழகத்தின் நில தேவதைகளாக போற்றப்பட்ட காலம், பண்டைய பரிபாடல்களில் வரும் ஹிந்து மத கடவுள்கள், ஒவையார் , நக்கீரனார் மற்றும் பல புலவர்களில் பாடல்களிலு ஆழ்வார்கள் , நாயன்மார்கள்,.சித்தர்கள்  பாடல்களிலும் ஹிந்து மத கடவுளர்கள் போட்டற படுகின்றனர்.

இதில் குறிப்பாக ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் காலம் தமிழகத்தில் பக்தி இல்லக்கிய காலமாக சொல்லபடுகிறது. கீ.பீ 5 முதல் கீ.பீ.8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள். தென் மொழியாம் தமிழ் மொழியில் இறை பக்தியை பாடியவர்கள். இந்தியாவின் முதல் பக்தி பாடல்கள் என்றல் அவை இவர்கள் பாடிய தேவாரம், திருவாசகம் மற்றும் பிரபந்தகல்தன்.  Aa ச. ஞான சம்பந்தன் என்று தமிழ் பேரறியகர் இதை தெரிவிக்கிறார். மற்ற மொழிகளில் ஏற்பட்ட பக்தி பாடல்கள் கீ.பீ. 15 முதல் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவைகள். கர்நாடக சங்கீதத்தின் பிதா மஹாரக  போட்ட்ரபடும் purandaradasarin காலம் 15 ஆம் நூற்றாண்டு. அதன் பிறகு சயாம சாஸ்திரிகள், முத்துச்வாமி தீட்சிதர், தியாகராஜர், வட நாட்டில் மீராவின் இன்னிசை பாடல்கள் எல்லாம் ஒரு 300 முதல் 500 வருடங்களுக்கு உட்பட்ட காலத்தை சேர்ந்தவை.

கர்நாடக சங்கீதத்தின் முன்னோடியாக சொல்லப்படும் தமிழ் இசை பண்கள் தமிழ் பக்தி மரபில்தான் தோன்றின. அதிலும் குறிப்பாக தேவாரம் பாடிய நால்வரும் தமிழ் இசை பண்களை போற்றி வளர்த்தனர். திருஞான சம்பந்தர் பல பண்களினால் இறைவனை உருகி பாடி இருகின்றார். மொழி, இசை மற்றும் பக்தி என்ற மூன்றின் ஒருங்கினைதுத பெருமை இவர்களேய சாரும். வேதியர் குலத்தில் பிறந்த திருஞான சம்பந்தர் வடமொழி வேதகளில் pandidharai விளங்கினாலும் தன்னை "தமிழ் ஞான சம்பந்தன்" என்று தம  பாடலில் சொல்லி இருக்கிறார். இது இவரின் அளவில மொழி பற்றை பறை சாற்றுகிறது. "தென்னாடுடைய சிவனே போற்றி'  என்று தேவாரம் பாட்டில் இறைவனின் ஆதாரம் தென்னாடு என்று போற்றி maghizndhanar . தமிழின் முதல் இலக்கான நூலை எழுதிய "அகத்தியர்" ஒரு பெரிய மஹா ரிஷி. இவர் இராமனுக்கு "ஆதித்ய ஹ்ருதயம்" உபதேசம் செய்தவர்.

இறை பாடல்களில் இறைவனை படுவது, இறைவன் எழுந்து அருளி இருக்கும் அந்த திருத்தலத்தின் இயற்கை அழகை பாடுவது, அத்தல பெருமை மற்றும் அத்தலத்தில் இருக்கும் மக்களையும் சேர்த்து பாடுவதாக மிக அழகை அமைந்து இருக்கும். முக்கியமாக திருத்தலத்தின் பெயர் சொல்லப்பட்டு இருக்கும் "பிரம புறம் ஏந்திய ", "சீரார் பெரும்துரை நம் தேவன் அடி போற்றி" என அமைந்து இருக்கும். இவை எல்லாவட்ட்ருக்கும் மேலாக மிக குறைந்த இடங்களில் மட்டுமே வடமொழி சார்ந்த சொல்லாக்கம் இருக்கும். அவைகளும் வட மொழிய அல்லது தமிழா என்று சொல்ல முடியாது. தமிழில் இருந்த வார்த்தைகள் வடமொழிக்கும  சென்று இருக்கலாம்.

ஆதி சங்கரர் சௌந்தர்யா லஹரியில் ஒரு ஸ்லோகத்தில் "திராவிட சிசு" என்று குறிபிடுகின்றார். சிலர் அவர் தன்னை அவரு சொல்லி கொள்கிறார் என்று சொல்வார்கள். ஆனால் அந்த ஸ்லோகத்தின் அர்த்தம் "உன்னிடம் ஞான பால் குடித்த திராவிட சிசு" என்பதாக வருகிக்றது. எனவே அது திருஞான சம்பந்தரே குறிபாதக சொல்லுவார்கள். அது பொருத்தமாகவும் உள்ளது. திராவிட சிசு என்பது, திராவிட நாட்டில் பிறந்து சிசு என்பதை விட, திராவிட மொழியில் iraivanai  சிசு என்றே பொருள் கொள்ள வேண்டும்.  அதாவது வடமொழியில் சங்கரர் எழுதய ஸ்லோகத்தில் தமிழில் தேவாரம் பாடிய  திரு ஞானசம்பந்தர் போட்டற படுகின்றார். இதோடு மட்டும் அல்லாமல் சித்தர்கள் பாடிய ஆயிரகணக்கான தமிழ் பாடல்கள் "சிவனை" போற்றி வணங்குகின்ரடா. திருமூலர்களின் பாடல்கள் வாழ்வியல், மருத்துவம், பக்தி, ஞானம் எல்லாவற்றைம் தனகந்தே கொண்டது. இவை போன்ற பாடல்கள் வேறு எந்த மொழியலவது இருகின்றத என்பது சந்தேகமே.

 "பெரும் சித்தனர்", "பெரிய சாமி" என்ற பெயர்கள் இன்றளவும் மக்களிடயே இருக்கும் பெயர்கள். இவை எல்லாம் "சிவனை" குறிக்கும் தமிழ் பெயர்கள். இவ்வாறாக  தமிழ், சைவத்தை போற்றி பாதுகாத்து , இந்த இறை அடியார்கள் தமிழை இறை மொழ்யாக, தேவ பாஷையாக இந்த உலகுக்கு அறிவித்தனர்.
 
காஞ்சி மகாஸ்வாமிகள் தன் உபன்யாசத்தில் கூறியது. சைவத்தில் பாடல் பெற்ற திருத்தலங்கள் 275 . அதாவது நால்வரும் பதிகம் பாடிய தலங்கள். ஒரு பதிகம் என்பது 10 பாடல்களை கொண்டது. இவை அல்லாமல் இப்பாடல்களில் வரும் திருத்தலங்களின் எண்ணிக்கை சுமார் 600 . அதாவது பாடல்களில் வரும் மொத தனங்களின் எண்ணிக்கை 600 . அவற்றில் பதிகம் மட்டும் பாடப்பட்டவை 275 .
 
இத்தலங்கள் யாவும் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களில் உள்ளவை. மற்றும் இலங்கையில் உள்ள திருத்தலங்களும் உண்டு. இப்படி ஒரு அமைப்பு பெற்ற பாடல்கள், இந்தியாவில் வேறு எந்த மொழியிலும்  கிடையாது என்பதனை கூறமுடியும். ஹிந்து மதத்திற்கு தமிழின் வாயிலாகவும், தமிழுக்கு ஹிந்து மதம் வாயிலாகவும்  இவர்கள் ஆற்றிய திருப்பணி வேறு எங்கும் கிடையாது.

இனி வைணவம் தமிழை எப்படி வளர்த்தது என்பதை அடுத்த கட்டுரையில்  பார்போம்.

 

No comments:

Post a Comment